Categories: Cinema News latest news

எங்க அண்ணனுக்கு நாங்க செய்யாம எப்படி? கோட்க்கு முன் டாப் ஹிட் இயக்குனர்கள் செய்த விஷயம்…

Goat Movie: இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் நாளை ரிலீசாக இருக்கும் நிலையில் பிரபல இயக்குனர்கள் போட்டிருக்கும் போஸ்ட் தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். அதிலும் லியோ படத்திலிருந்து விஜய் மீதான பாப்புலாரிட்டி எக்கச்சக்கமாக உயர்ந்து இருக்கிறது. லியோ படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அதற்கு லோகேஷின் சினிமாட்டிக் யூனிவர்ஸ் தான் காரணம் என கலாய்த்தனர்.

இதையும் படிங்க: விஜய் அரசியலால் கோட் படத்துக்கு சிக்கலா? தயாரிப்பாளர் சொல்வது என்ன?

அதைத்தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ட்ரெய்லருக்கு பின் எக்கச்சக்கமாக அதிகரித்து இருக்கிறது. படத்திற்கு பெரிய அளவிலான எதிர்பார்ப்பை படக்குழு விரும்பவில்லை என்று தான் கூறப்படுகிறது.

ஓவர் ஆசையில் ரசிகர்கள் தியேட்டருக்கு வந்தால் அது படத்திற்கு பாதிப்பாக அமையும். இருந்தும் சமீப நாட்களாக படக்குழு கொடுக்கும் பேட்டிகளில் சிலவற்றை ஒளித்து வைக்காமல் ஓப்பனாக சொல்லி ரசிகர்களை தயார் படுத்தியே தியேட்டர் வர வைக்க முடிவெடுத்துள்ளனர்.

இந்நிலையில் நாளை காலை 9 மணி முதல் தமிழகத்தில் முதல் காட்சி தொடங்கப்பட இருக்கிறது. ரசிகர்களும் பரபரப்பாக படத்திற்காக காத்திருக்கின்றனர். தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் கோட் திரைப்படத்திற்கு அதிகாலை காட்சிகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

lokesh atlee

இதையும் படிங்க: ஐஸ்வர்யா ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் போல நான் இல்ல.. ஓபனாக பேசிட்டாரே!…

இதனால் படத்தின் முதற்கட்ட அறிவிப்பு தமிழக காட்சி தொடங்கும் முன்னரே தெரிந்துவிடும். விஜய் ரசிகர்கள் பரபரப்பாகவும்,  படத்தை கலாய்க்க மற்ற நடிகர்களின் ரசிகர்களும் தயார் நிலையில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜயின் ஆஸ்தான இயக்குனர்களான லோகேஷ் கனகராஜ் மற்றும் அட்லி இணைந்து நாளை வெளியாக இருக்கும் கோட் திரைப்படத்திற்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அந்த பதிவில் யுவர்ஸ் பாய்ஸ் எனக் குறிப்பிட்டிருப்பது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily