Categories: Cinema News latest news throwback stories

டிரிங்க் அண்ட் டிரைவ் கேஸில் சிக்கிய விஜய்!.. அப்புறம் என்னாச்சி தெரியுமா?…

Acror vijay: தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். ரசிகர்கள் இவரை தளபதி என அழைக்கின்றனர். துவக்கத்தில் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய படங்களில் மட்டுமே நடித்து வந்தார். அதன்பின் பூவே உனக்காக படத்தின் வெற்றி இவரை வைத்து மற்ற இயக்குனர்களின் படத்திலும் நடிக்க வைத்தது.

துவக்கத்தில் இவர் நடித்தது எல்லாமே காதல் படங்கள்தான். காதலுக்கு மரியாதை, லவ் டுடே என உருகி உருகி காதலிக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் மெல்ல மெல்ல ஆக்‌ஷன் ரூட்டுக்கு மாறி தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கினார்.

இதையும் படிங்க: அப்பாவிடம் சண்டை போட்டு வீட்டை விட்டு போன விஜய்!.. கடைசியில் எங்கே இருந்தார் தெரியுமா?…

இப்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் மாறியிருக்கிறார். இவருக்கென உயிரை விடும் ரசிகர் கூட்டமும் இருக்கிறது. இவரின் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தை காண அவரின் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கிறார்கள். அதோடு, இந்த படத்தின் டிரெய்லர் வீடியோ வருகிற 5ம் தேதி வெளியாகவுள்ளது.

நடிகர் விஜய் ஒரு முறை டிரிங்க் அண்ட் டிரைவ் வழக்கில் சிக்கிய விவகாரம் பற்றித்தான் இங்கே பாரக்க் போகிறோம். விஜய்க்கு இருப்புது ஒரே ஒரு நட்பு வட்டாரம்தான். லயோலாவில் அவருடன் படித்த சின்னத்திரை நடிகர் சஞ்சீவ், ஸ்ரீநாத், மனோஜ், ராம்குமார் என குறிப்பிட்ட நண்பர்கள் மட்டுமே. நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவர்களோடு மட்டும்தான் விஜய் நேரம் செலவிடுவார்.

இதையும் படிங்க: விஜய் பட டைட்டிலை உருவாக்கிய ரஜினி மகள்!.. இதுக்கா செல்லங்களா இப்படி அடிச்சிக்கிட்டீங்க!..

பல வருடங்களுக்கு முன் சென்னை வடபழனி பகுதியில் விஜய் சஞ்சீவ் உள்ளிட்ட சில நண்பர்களுடன் காரில் வந்தபோது போலீசார் அவர்களின் காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரை ஓட்டியவர் உட்பட அதில் சிலர் மது அருந்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், விஜய் மட்டும் மது அருந்தியிருக்கவில்லை. .

ஆனாலும், போலீசார் எல்லோர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். அதன்பின் எஸ்.ஏ.சந்திரசேகர் காவல் நிலையம் சென்று அவர்களை அங்கிருந்து மீட்டு வந்துள்ளார். அந்த வழக்கு பற்றிய தகவல் இப்போது சென்னை வடபழனி காவல் நிலையத்தின் பழைய ஆவணங்களில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: லியோ ப்ளாப் ஆகிடுமா?.. அடேய் உங்க லாஜிக்குல தீய வைக்க… கடுப்படிக்கும் விஜய் ரசிகர்கள்!

Published by
சிவா