தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது பீஸ்ட் படத்திற்கு பிறகு தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கூட இவரின் பிறந்த நாளின் போது வாரிசு படத்தின் மூன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியானது.
கிட்டத்தட்ட இது விஜயின் கெரியரில் 66வது படமாகும். ஆரம்பகாலங்களில் கிடைத்த கதைகளில் நடித்துக் கொண்டு ஏகப்பட்ட தோல்விகளை சந்தித்தவர். பொதுவாக அந்த காலங்களில் எல்லாம் இவருக்கு ஜோடியாக சங்கவி, சுவாதி போன்றோர்தான் அதிகளவில் நடித்தார்கள்.
மேலும் இவர்களுடன் விஜய் செய்யும் ரொமான்ஸ் காட்சிகள் எல்லாம் அந்த கால மலையாள பகல் காட்சிகள் மாதிரியான படங்களாக தான் இருந்தது என வலைப்பேச்சு பிஸ்மி கூறினார். மேலும் குடும்பங்கள் வந்து பார்க்கிற அளவிற்கு எல்லாம் இருக்காது எனவும் தெரிவித்தார்.
ஒரு காலகட்டத்தில் பாத்ரூமில் ஹீரோயின் குளிக்கும் போது கதா நாயகிக்கே தெரியாமல் ஹீரோ முதுகு தேய்த்து விடுவது மாதிரி ஒரு படத்தில் தன் மாமியாரா நடித்திருக்கும் ஸ்ரீவித்யா குளிக்கும் போது விஜய் போய் தன் காதலி என நினைத்து முதுகு தேய்த்து விடுவார் என கூறினார். இதையெல்லாம் பார்த்த ஊடகங்கள் கிட்டத்தட்ட விஜயை ஆம்பள ஷகீலா என எழுதினார்கள். ஏன் நான் கூட என் பத்திரிக்கையில் எழுதியிருக்கிறேன் என கூறினார் பிஸ்மி.
STR49: சினிமாத்துறை…
Vijay TVK:…
Idli kadai…
ரஜினி கமல்…