ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெய்லர் படத்தின் வெற்றியால் பல தரப்பில் வரவேற்புகள் எழுந்த நிலையில், சில சர்ச்சைகளும் சூப்பர்ஸ்டாரை சுழன்று அடிக்கிறது. இதில் பலர் ரஜினிகாந்துக்கு ஆதரவாக பேசிவந்த நிலையில் விஜய் தேவரகொண்டா பேசிய பேட்டி தற்போது சர்ச்சையாகி இருக்கிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த திரைப்படம் ஜெய்லர். இப்படத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, ரம்யாகிருஷ்ணன், யோகி பாபு, சுனில் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்திருந்தனர். படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்த நிலையில், படம் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியினை பெற்றது. கிட்டத்தட்ட மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி வருகிறது. தொடர்ச்சியாக படத்திற்கு நல்ல வரவேற்பே நிலவி வருகிறது.
இதையும் படிங்க: வேணும்னு கூட்டிட்டு வந்து இப்படியா அடிக்கிறது! விஜயகாந்த் விட்ட அறையால் சுருண்டு விழுந்த ராதிகா
விஜய் தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என்ற பஞ்சாயத்து கிளம்பி இருந்த நிலையில் அந்த பிரச்னையை உடைத்து தான் தான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என்பதை உறுதிப்படுத்தினார். இதனால் பிரபலங்கள் எல்லாரும் பேட்டியில் யார் அடுத்த சூப்பர்ஸ்டார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இதில் பலரும் ஆம் எப்போதுமே சூப்பர்ஸ்டார் ரஜினி தான் என அவருக்கே சப்போர்ட் செய்தனர். இதனால் லியோ படத்திற்கும் அதிக எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. படத்தின் வசூலை அதிகரிக்க மிகவும் சர்ப்ரைஸாக சீக்ரெட்டை பாதுகாத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: எல்லோர் முன்னிலையிலும் கன்னத்தில் பளார்விட்ட விஜயகாந்த்.. வன்மம் வளர்த்து பழிவாங்கிய வடிவேலு!..
இப்படி ஒருபக்கம் இருக்க, மற்றொரு பக்கம் சர்ச்சை கிளம்பி வருகிறது. ரஜினியின் இமயமலை பயணத்துக்கு பின்னர் விஜய் தேவரகொண்டா கொடுத்த பேட்டியும் சர்ச்சையாகி இருக்கிறது. இந்த நிலையில் தெலுங்கில் நடைபெற்ற குஷி பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய் தேவரகொண்டா ரஜினிகாந்த்தின் 6 படங்கள் தோல்வியடைந்தது. அதில் இருந்து மீண்டும் ஜெய்லரை வெற்றி படமாக்கி இருக்கிறார். 500 கோடி ரூபாய் வசூலித்ததாக குறிப்பிட்டார்.
ரஜினியின் சமீபத்திய எல்லா படங்களுமே விமர்சன ரீதியாக குறைந்தாலும் வசூலில் எந்த வித குறையுமே வைக்கவில்லை. வளர்ந்து வரும் விஜய் தேவரகொண்டா இதையெல்லாம் தெரியாமல் வந்து மீடியா முன்னாடி பேசலாமா? ஒருவேளையில் வைரலில் இருக்கும் ரஜினியை பற்றி பேசினால் தன்னுடைய குஷி படத்துக்கு வசூல் வரும் என்ற ரீதியில் பேசுகிறாரோ எனக் கிசுகிசுத்து வருகின்றனர்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…