Categories: Cinema News latest news

வெங்காயம் வாங்குறவன்லாம் ஆம்பளை இல்லையா!.. விஜய் தேவர கொண்டாவுக்கு இந்த படமாவது வெளங்குமா?..

விஜய் தேவரகொண்டாவின் புதிய திரைப்படமான ஃபேமிலி ஸ்டார் படத்தின் க்ளிம்ஸ் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகியுள்ளது.

விஜய் தேவர்கொண்டா, ராஷ்மிகா மந்தனா நடித்து மிகப்பெரிய வெற்றியை குவித்த கீதா கோவிந்தம் படத்தின் இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவர்கொண்டா, மிருணாள் தாகூர் நடிப்பில் உருவாகியுள்ள ஃபேமிலி ஸ்டார் திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிப்புடன் அதிரடியாக தற்போது க்ளிம்ஸ் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: மாஸ்டர் படத்தை போலவே லியோ படக் காட்சிகள் இணையத்தில் லீக்!.. அதிலும், அந்த ஹைனா சீனே வந்துடுச்சே!..

கீதா கோவிந்தம் படத்தை பார்த்துவிட்டு அதைப்போல ஒரு பக்காவான கமர்சியல் படத்தின் நடிக்க வேண்டும் என நினைத்த மகேஷ் பாபு சர்க்காரு வாரி பாட்டா படத்தை இயக்க பரசுராமை அணுகினார். மகேஷ்பாபு, கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி நடித்த அந்த திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய சொதப்ப ஏற்படுத்தியது.

வரிசையாக பல தோல்விகளை சந்தித்து வரும் விஜய் தேவரகொண்டா சமீபத்தில் சமந்தாவுடன் நடித்து வெளியான குஷி திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காத நிலையில், அடுத்ததாக ஃபேமிலி ஸ்டார் படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார்.

இதையும் படிங்க: 16 வயதில் ராஜ்கிரண் எடுத்த முடிவு!. விஜயகாந்துக்கு முன்னாடியே அப்படி யோசிச்ச மனுஷன் இவர்தான்!…

தற்போது வெளியான கிளிம்ஸ் காட்சியில், வெங்காயம் வாங்குறவன் எல்லாம் ஆம்பளை இல்லையா, இரும்பை வளைக்க முடியாதா என பஞ்ச் பேசி ஒருத்தன் மண்டையை தேங்காய் வைப் போல உடைக்கும் அதிரடியான காட்சியும், அதன் பின்னர் வீட்டில் என்னங்க என மிருணாள் தாக்கூர் ரொமான்டிக் உடன் அழைக்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.

கீதா கோவிந்தம் போல மீண்டும் விஜய் தேவரகொண்டா பரசுராம் இயக்கத்தில் உருவாகும் இந்த படம் கை கொடுக்குமா? அல்லது மகேஷ்பாபு படம் போல பல்டி அடிக்குமா என்கிற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்.

Saranya M
Published by
Saranya M