×

லாபமில்லா அறக்கட்டளையில் 17000 குடும்பங்களுக்கு உதவிய விஜய் தேவரகொண்டா!

கொரோனா ஊரடங்கினாள் அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்த ஏழை எளிய மக்களின் வாழ்க்கை கேள்வி குறியாகியுள்ளது. சாப்பாட்டிற்கே வழியின்றி தவிக்கும் மக்களுக்கு அரசாங்கம் தேவையான உதவிகளை செய்து வருகிறது. மேலும் நிறைய அறக்கட்டளைகள் , தொண்டு நிறுவனங்கள் , பிரபலங்கள் என் அனைவரும் மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்து வருகின்றனர்.

 

அந்த வகையில் தென்னிந்திய சினிமாவின் பிரபல இளம் நடிகரான விஜய் தேவர்கொண்டா லாபமில்லா அறக்கட்டளை ஒன்றை ஆரம்பித்து வருமானங்கள் இழந்து பாதிக்கப்பட்ட ஏழை குடும்பங்களுக்கு  தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மளிகைப் பொருட்கள் நிவாரண உதவியாக அளிக்கப்பட்டுள்ளது.

இதுவரை ரூ.1.7 கோடி ரூபாயில் சுமார் 17,723 குடும்பங்களுக்கு உதவி செய்துள்ள இந்த அறக்கட்டளையில் 8,505 தன்னார்வத் தொண்டர்கள் தங்களை இணைத்துக் கொண்டு ரூ.1.5 கோடி ரூபாய் அளவிற்கு நிதி திரட்டி சுமார் 58,808 குடும்பங்களுக்கு  உதவிகள் செய்துள்ளனர்.  விஜய் தேவரகொண்டாவின் இந்த செயலை பலரும் பாராட்டியுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News