குஷி படம் ரிலீஸ் ஆகிற குஷியை விட கூடிய விரைவிலேயே தனக்கு திருமணம் ஆகப் போகிறது என்கிற குஷியில் தான் விஜய் தேவரகொண்டா அதிகம் இருக்கிறார் போலத் தெரிகிறது. சமீபத்தில், நடிகை சமந்தாவுடன் பேட்டி அளிக்கும் போதே விஜய் தேவரகொண்டாவுக்கு இந்த ஆண்டே திருமணம் நடக்கப் போவதாக சமந்தா சொல்லியிருந்தார்.
ஆனால், தனக்கு இன்னும் 3 ஆண்டுகளுக்கு மேல் தான் திருமணம் நடைபெறும் என்று அறிவித்த விஜய் தேவரகொண்டா சமீபத்தில், செய்தியாளர்கள் சந்திப்பில் தனக்கு திருமணம் நடைபெற்றால், அது உங்க யாருக்குமே தெரியாது. ரகசியமாக பாதுகாத்துக் கொள்வேன் என பகீர் கிளப்பி இருந்தார். இந்நிலையில், திடீரென தனக்கு விரைவில் திருமணம் ஆகப் போவதை போல ஒரு ஸ்டோரியை இன்ஸ்டாகிராமில் வைத்து தனது ரசிகர்களின் தலையை பிய்த்துக் கொள்ள வைத்து விட்டார்.
இதையும் படிங்க: என்னையும் பிரபுவையும் சண்டை போடவிட்டு வேடிக்கைப் பார்ப்பாரு ரஜினி!.. பி. வாசு இப்படி சொல்லிட்டாரே!..
ஒரு பெண்ணின் கையை பிடித்துக் கொண்டிருப்பது போன்ற போட்டோவை ஷேர் செய்த விஜய் தேவரகொண்டா ஏகப்பட்ட விஷயங்கள் நடக்கிறது. ஆனால், இது சம்திங் ஸ்பெஷல்.. விரைவில் இதுகுறித்து அறிவிக்கப் போகிறேன் என ரசிகர்களையும் சினிமா வட்டாரத்தையும் அலர்ட் செய்துள்ளார்.
ஒரு கை விஜய் தேவரகொண்டா உடையது என்பது புரிகிறது. ஆனால், அந்த இன்னொரு கை சமந்தா கையா? அல்லது ராஷ்மிகா கையா? என ரசிகர்கள் ஏகப்பட்ட போட்டோக்களை தேடி மேட்ச் செய்து பார்த்து வருகின்றனர்.
இதையும் படிங்க: உன் சைனிங் உடம்ப பாத்தே இளச்சி போனோம்!. அந்த அழகை அப்படியே காட்டும் தர்ஷா குப்தா…
எல்லாமே செப்டம்பர் 1ம் தேதி வெளியாகப் போகும் குஷி படத்துக்கான புரமோஷன் என்று சில நெட்டிசன்களும், அடுத்த படம் ராஷ்மிகா மந்தனாவுடன் இருக்கும் அந்த அறிவிப்பைத் தான் விஜய் தேவரகொண்டா இப்படி பில்டப் பண்ணி சொல்கிறாரா என கிண்டல் செய்து கமெண்ட் போட்டும் வருகின்றனர்.
ஆனால், இந்த முறை விஜய் தேவரகொண்டா ரொம்பவே சீரியஸாக உள்ளார் என்றும் திருமணம் செய்துக் கொள்ளப் போகும் தனது காதலியை சீக்கிரமே அறிவிப்பார் என தெரிகிறது. நடிகையாக இல்லாமல், வேறு யாராவது இருந்தால் கூட ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்றும் கூறுகின்றனர்.
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…