×

விஜய்யை தப்பா பேசாதவர்களே இல்லை! என்ன இவர் இப்படி சொல்லிட்டார்....

தளபதி விஜய் தனது தனி தன்மை வாய்ந்த நடிப்பினால் தமிழ் திரையுலகில் தனக்கென்று ஒரு தனி இடத்தை ரசிகர்கள் மனதில் சம்பாதித்து கொண்ட ஒரு நடிகர். இவர் தற்போது இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து முடித்திருக்கும் படம் மாஸ்டர்.
 

தற்போது இப்படத்தின் ரிலீஸ் வேலைகள் முழு மூச்சாக போய்க்கொண்டு இருக்கிறது.

தளபதி விஜய்யை பற்றி பலரும் பல விஷயங்களை நேர்காணல்களில் பகிர்ந்து கொள்வதை நாம் பார்த்திருப்போம்.

அந்த வகையில் தற்போது பிக் பாஸுக்கு சென்று தனக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் ஹரிஷ் கல்யாண்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் "நான் விஜய் சாரோட மிக பெரிய ரசிகன், நான் முதன் முதலில் நான் அவருக்கு ரசிகனான ஷாஜகான் தான்".

மேலும் "நான் அவருக்கு ரசிகன் ஆவதற்கு மிக பெரிய காரணம் அவரை பற்றி தவற பேசாத பத்திரிகையே கிடையாது, ஆனாலும் அவர் அதையெல்லாம் தாண்டி வந்த ஒரு நடிகர்" என்று வெளிப்படையாக கூறினார்.

From around the web

Trending Videos

Tamilnadu News