வா வா டியரு பிரதரு... கேப்டனுக்காக கோட் படக்குழுவினர் செய்த செம மேட்டரு இதான்!

 
வா வா டியரு பிரதரு... கேப்டனுக்காக கோட் படக்குழுவினர் செய்த செம மேட்டரு இதான்!
Vijay: விஜய் மற்றும் கோட் படக்குழு படத்தின் ரிலீஸ் நெருங்கி இருப்பதை அடுத்து தற்போது செய்து இருக்கும் விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டின் தளபதி விஜயின் சினிமா வாழ்க்கை இன்று வேண்டும் என்றால் பெரிய உச்சத்தில் இருக்கலாம். ஆனால் அவரின் தொடக்கப்புள்ளி என்னவோ விஜயகாந்த் போட்டு கொடுத்தது தான். நிறைய தடுமாற்றத்தினை சந்தித்துவந்த விஜய் படத்தில் நடிக்க விஜயகாந்திடம் கோரிக்கை வைக்கிறார் எஸ்.ஏ.சி. இதையும் படிங்க: கங்குவாக்கு எதிராக வேட்டையனைக் களமிறக்கியது ரஜினி இல்லையாம்…! அப்போ யாரு அது?
வா வா டியரு பிரதரு... கேப்டனுக்காக கோட் படக்குழுவினர் செய்த செம மேட்டரு இதான்!
இதை தொடர்ந்து பல இடங்களில் விஜயிற்கு ஏறுமுகமாக செயல்பட்டது என்னவோ கேப்டன் விஜயகாந்த் தான். இதை தொடர்ந்து அவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட போது கூட அவரை பார்க்க வேண்டும் என தளபதி தரப்பு பலமுறை கோரிக்கை வைத்த போதும் அவரது குடும்பத்தினர் அதற்கு சம்மதிக்கவில்லை. இதை தொடர்ந்து கடந்த வருடம் விஜயகாந்த் திடீரென இறந்தார். ஷூட்டிங்கில் இருந்த விஜய் உடனே இரண்டு பிளைட் மாறி வந்து நடுஇரவில் விஜயகாந்தை கண் கலங்கி பார்த்து நின்றது பலருக்கு நெஞ்சை உருக்கும்படியாக அமைந்து இருந்தது. இதை தொடர்ந்தே விஜயின் அரசியல் எண்ட்ரிக்கு முன்னர் கடைசி படத்தில் தன் அண்ணன் இருக்க வேண்டும் என ஆசைப்பட்டாராம். இதையும் படிங்க:  சினிமாவில் பானுப்பிரியா நடிக்காதது இதுக்குத்தானா? அவருக்கு சரியான ஜோடி அந்த ஹீரோவாம்..!
வா வா டியரு பிரதரு... கேப்டனுக்காக கோட் படக்குழுவினர் செய்த செம மேட்டரு இதான்!
படத்தின் புரோமோஷன்கள் அதிகாரப்பூர்வமாக தொடங்குவதற்கு முன்னர் தற்போது ஒரு முக்கிய விஷயம் வெளியாகி இருக்கிறது. கோட் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியுடன் இணைந்து தளபதி பிரேமலதா விஜயகாந்தை அவர் இல்லத்தில் சந்தித்து இருக்கின்றனர். இதுகுறித்து புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. வா வா டியரு பிரதரு... கேப்டனுக்காக கோட் படக்குழுவினர் செய்த செம மேட்டரு இதான்!   மேலும் புகைப்படங்களுக்கு: https://www.instagram.com/p/C-2wP88PwLi/?igsh=N2hmeGNzOTZ2ZzZx&img_index=2

From Around the web