
Cinema News
அரசு இடமா?.. மீண்டும் விஜய்க்கு வந்த சிக்கல்?.. இத எப்படி சமாளிக்கப் போகிறார்?..
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது லியோ படப்பிடிப்பில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சினிமாவை பொறுத்தவரைக்கும் ஒரு நடிகர் பிரபலமாக இருக்கும் போது அவருக்கு தொடர்ந்து ஏதாவது பல பிரச்சினைகள் வந்து கொண்டே தான் இருக்கும்.
அதே போல் தான் நடிகர் விஜய்க்கும் அப்படிப்பட்ட பிரச்சினை ஒன்று சமீபத்தில் வந்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பே போக்குவரத்து விதிகளை மீறி தனது காரில் கருப்பு நிற ஃபிலிம் ஸ்டிக்கரை ஒட்டியிருப்பதாக விஜய்க்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.

ஆனாலும் அதை இன்னும் அகற்றாமலேயே சுற்றிக் கொண்டு வருகிறார். சமீபத்தில் கூட அஜித்தின் தந்தை மரணத்திற்கு கூட தனது டொயாட்டோ காரில் வந்தார். ஆனால் அதில் கருப்பு நிற ஃபிலிம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மற்றுமொரு பிரச்சினை விஜயை தேடி வந்திருக்கிறது. சென்னை நீலாங்கரை வீட்டிற்கு வெளியே விஜய்க்கு சொந்தமான ஒரு டிரான்ஸ்பார்மர் இருக்கிறது. ஆனால் அது அரசுக்கு சொந்தமான இடத்தில் இருக்கிறதாம். பொதுவாக பெரிய பெரிய தொழிற்சாலைகள், நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான மொத்த மின்சாரத்தை மின் தொழிற்சாலையில் பணத்தை கட்டி வாங்கி கொள்வார்கள்.

அதன் பிறகு டிரான்ஸ்பார்மர் உதவியுடன் தங்கள் கிளைகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து பிரித்து உபயோகித்துக் கொள்வார்கள். அதே வகையில் விஜயின் வீட்டிற்கு வெளியே இருக்கும் டிரான்ஸ்பார்மரில் சிவப்பு நிற எழுத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் விஜயின் வீடு என்று கூட எழுதப்பட்டிருக்கிறதாம்.
இதை கவனத்திற்கு கொண்டு வந்த ஊடகங்கள் இந்த செய்தியை வைரலாக்கி வருகின்றது. இதன் மூலம் விஜய்க்கு சொந்தமாக இருந்து அரசுக்கு உரிய இடத்தில் அந்த டிரான்ஸ்பார்மர் இருந்திருந்தால் ஒரு வேளை அரசு அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டனரா? இல்லை அரசுக்கே தெரியாமல் விஜய் அங்கே டிரான்ஸ்பார்மர் வைத்தாரா? என விசாரிக்க வேண்டும் என செய்திகள் கூறிவருகின்றனர்.