Categories: Cinema News latest news throwback stories

கேலி..கிண்டல்..அவமானம்.. பொங்கியெழுந்த விஜய்.. அதுக்கு அப்புறம் எல்லாமே ஹிட்டுதான்…

திரைத்துறையில் வாய்ப்பு என்பது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல. அதுவும் ஹீரோ வாய்ப்பு என்பது சுலபத்தில் கிடைத்து விடாது. தயாரிப்பாளர், இயக்குனர் அல்லது நடிகர்களின் வாரிசு எனில் சுலபமாக வாய்ப்பு கிடைக்கும். ஆனால், அந்த வாய்ப்பையும் தக்க வைக்க போராட வேண்டும். பல வாரிசுகள் சினிமாவில் சுலபமாக இறங்கியுள்ளனர். ஆனால், நிலைத்து நின்றவர்கள் வெகு சிலர்தான்.

vijay

தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்த எஸ்.ஏ.சந்திரசேகரின் மகன் விஜய் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டார். சினிமாவில் பல வருடங்கள் கொட்டை போட்ட எஸ்.ஏ.சி ‘உனக்கு சினிமா வேண்டாம்’ என அறிவுரை செய்தார். ஆனால், விஜய் கேட்கவில்லை. மகன் உறுதியாக இருந்ததால் ‘சரி இறங்கி பார்க்கட்டும். அவனுக்கே புரியும்’ என அவரே சொந்த காசை போட்டு ‘நாளைய தீர்ப்பு’ என்கிற படத்தை எடுத்தார்.

முதல் நாள் படப்பிடிப்பு நடக்கும்போதே விஜயின் காது படவே ‘இந்த மூஞ்சிலாம் ஹீரோவா… ஹீரோவா யார் நடிக்கிறதுன்னு விவஸ்தையே இல்லையா’ என அவரின் காதுபடவே பலரும் பேசி நக்ககலடித்துள்ளனர். இதையெல்லாம் கேட்ட விஜய் அன்று இரவு தூங்காமல் அழுது கொண்டே இருந்தாராம். சினிமா எனில் இப்படித்தான் இருக்கும் என எஸ்.ஏ.சியும், அவரின் அம்மா ஷோபாவும் அவருக்கு ஆறுதல் சொல்லியுள்ளனர்.

நாளைய தீர்ப்பு படம் வெளியான போது ஒரு பிரபல பத்திரிக்கை ‘லாரி டயர்ல நசுங்குன தகர டப்பா போல மூஞ்சி’ என விஜயை நாகரீகமில்லாமல் விமர்சனம் செய்தது. இதையெல்லாம் தாண்டித்தான் விஜய் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி தற்போது இந்த இடத்திற்கு வந்துள்ளார். அவரின் கால்ஷீட்டுக்காக தயாரிப்பாளர்கள் தவம் கிடக்கிறார்கள். அவரின் திரைப்படங்கள் நூறுகோடிக்கும் மேல் வசூல் செய்கிறது.

விஜயை நாகரீகமின்றி வந்த அந்த விமர்சனத்தை விஜய் இப்போதும் வீட்டில் பிரேம் போட்டு ஒட்டி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆர்யாவால் ஏற்பட்ட வலி!.. அப்ப முடியாததை இப்ப வச்சு செய்யும் நடிகை!..

 

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா