Connect with us

Cinema News

வேண்டும்..வேண்டும்…விஜய் படத்துக்கு வேண்டும்… எக்ஸில் போர்கொடி தூக்கிய தளபதி ரசிகர்கள்!… ஓவரா இல்ல!

Lokesh Leo: கோலிவுட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்க படம் தளபதி விஜய் – லோகேஷ் காம்போவில் வெளிவர இருக்கும் லியோ படம். அக்டோபர் 19-ம் தேதி ரிலீஸாக இருக்கும் இந்தப் படத்தில் மாஸ்டர் வெற்றிக்குப்பிறகு விஜய்யும் லோகேஷ் கனகராஜூம் கைகோர்த்திருக்கிறார். 

விக்ரம் படத்தின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றி லோகேஷ் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்திருக்கிறது. இன்னொரு பக்கம் பீஸ்ட், வாரிசு படங்களுக்குப் பிறகு விஜய் இறங்கி அடிக்கும் வகையில் லியோ படம் இருக்க வேண்டும் என்பதிலும் கவனமாக இருக்கிறார்கள். 

இதையும் வாசிங்க: என் படத்தை எனக்கே போட்டு காட்டினாலும் நீதான்டா அடுத்த ஆடு! ‘ஜவான்’ வெற்றி கமலை எப்படியெல்லாம் மாத்திடுச்சு?

விஜய் – லோகேஷ் காம்போ ஒரு பக்கம் என்றால் திரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் நடித்திருக்கிறார்கள். 

இந்திய அளவில் படம் மிகப்பெரிய ஹிட்டாகும் என்றே டிராக்கர்களும் கணித்து வருகிறார்கள். இப்படியான சூழ்நிலையில், தமிழ்நாடு அரசு எடுத்திருக்கும் ஒரு முடிவு விஜய் ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. 

தமிழ்நாடு அரசின் சமீபத்திய முடிவின்படி, திங்கள் முதல் வெள்ளி வரையிலான வேலை நாட்களில் சிறப்புக் காட்சிக்கான அனுமதி காலை 9 மணிக்குத்தான் என்று அறிவித்தது. இதன்படியேதான் சமீபத்தில் ரிலீஸான ஜெயிலர்கூட முதல் ஷோவே காலை 9 மணிக்குத்தான் திரையிட்டார்கள். 

இதையும் வாசிங்க: தன் மகளுக்கு நோ சொன்ன ராதிகா… வரலட்சுமிக்கு மட்டும் தாராளம் காட்டிய அதிசயம்.. அப்படி என்ன சேதி?

ஆனால், விஜய் படத்தின் வசூல் மற்ற வசூல் சாதனைகளை எல்லாம் முறியடிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகிறார்கள். அத்தோடு காலை 9 மணிக்குத்தான் சிறப்புக் காட்சிக்கு அனுமதி என்பதை தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். எங்களின் தளபதி விஜயின் லியோ படத்துக்கு அதிகாலை ஷோவுக்கே அனுமதி கொடுக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக்குகளோடு தமிழ்நாடு அரசுக்கு எதிராகக் காட்டமாகக் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள். 

இந்த விவகாரம் தொடர்பாக விஜய் ரசிகர்கள் கொந்தளிப்பாகக் கருத்துகள் தெரிவித்தாலும், அரசு தரப்பில் இருந்து இதுவரை முறையாக எந்தவொரு பதிலும் கொடுக்கப்படவில்லை. 

லியோ படத்தின் ஸ்பெஷல் ஷோக்களுக்கு 9 மணிக்கு முன்பாக அனுமதி கிடைக்குமா கிடைக்காதா என்பது பட ரிலீஸுக்கு முன்புதான் தெரியும் என்கிறார்கள். சமீபத்தில் பிரபல தயாரிப்பாளர் தனஜெயன் அதிகாலை ரிலீசுக்கு வாய்ப்பே இல்லை எனத் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top