கட்டா குஸ்தி 2 எப்டி ஓடுதுன்னு பார்ப்போம்!. வன்மத்தை கக்கும் விஜய் ஃபேன்ஸ்!....

 
gatta kusthi
கட்டா குஸ்தி 2 படத்திற்கு எதிராக விஜய் ரசிகர்கள் வன்மத்தை கக்கி வருகிறார்கள்.


தீவிர விஜய் ரசிகர்களுக்கு ஒரு பழக்கம் உண்டு. விஜயை யாராவது நக்கலடித்து பேசினாலோ இல்லை அவருக்கு எதிராக பேசினாலோ அந்த நடிகரின் படம் வெளியாகும் போது அந்த படத்திற்கு எதிராக நெகட்டிவ்வான விமர்சனங்களை பரப்புவார்கள். ஜெயிலர் பட விழாவில் ரஜினி காக்கா கழுகு கதையை சொன்னபோது அடுத்த வெளியான வேட்டையன் படத்திற்கு அதிகப்படியான நெகட்டிவ் விமர்சனங்களை விஜய் ரசிகர்கள் பரப்பினார்கள்.

முதல் காட்சி வெளியாவதற்கு முன்பே Vettaiyandisaster என ஹேஷ்டேக் போட்டு ட்ரெண்டிங் செய்தார்கள். அந்த படத்தின் இயக்குனரே இதை ஒரு பேட்டியில் ஆதங்கத்துடன் சொல்லியிருந்தார். ஏதேனும் ஒரு வகையில் மறைமுகமாக கூட விஜயை பற்றி பேசி விட்டால் விஜய் ரசிகர்கள் தொடர்ந்து அந்த நடிகரின் படத்துக்கு எதிராக வன்மத்தை கக்கி வருகிறார்கள்.

twitt

ரஜினி, சூர்யா, சிவகார்த்திகேயன் என யாரும் இதிலிருந்து தப்பவில்லை. தற்போது இதில் விஷ்ணு விஷாலும் இதில் சிக்கிவிட்டார். சமீபத்தில் அளித்த பேட்டியில் ரஜினியை தலைவர் என்றும் விஜயை அவரின் பெயரை சொல்லியும் பேசினார். இது விஜய் ரசிகர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.. இதையடுத்து, இன்று அவரின் கட்டா குஸ்தி 2 படம் வெளியாகியிருக்கும்  நிலையில் இன்று காலை முதலே படத்திற்கு எதிராக வன்மத்தை கக்க துவங்கி விட்டார்கள்.

twitter

இந்த படம் ப்ரோமோஷன் தொடர்பாக எக்ஸ் தளத்தில் விஷ்ணு விஷால் பகிரும் எல்லா பதிவுகளிலும் போய் ‘படம் எப்படி ஓடுதுன்னு பாக்கலாம்.. படம் அட்டர் பிளாப்’.. என்றெல்லாம் வன்மத்தை கக்கி வருகிறார்கள். அதுவும் ஆபாசமான வார்த்தைகளில் படத்தையும் விஷ்ணு விஷாலையும் அவர்கள் திட்டி வருகிறார்கள். இதில் உண்மை என்னவெனில், இவர்களில் யாருமே இதுவரை படம் பார்க்கவில்லை. முதல் காட்சியே இன்னும் முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

From Around the web