×

கர்பிணிகளுக்கு இலவச ஆம்புலன்ஸ்... அசால்ட்டு பண்ணும் விஜய் மக்கள் மன்றம்..

லாக்டவுன் முடியும் வரை கர்ப்பிணிகளுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவையை மயிலாதுறை விஜய் மக்கள் மன்றத்தினர் அறிவித்துள்ளனர்.
 
கர்பிணிகளுக்கு இலவச ஆம்புலன்ஸ்... அசால்ட்டு பண்ணும் விஜய் மக்கள் மன்றம்..

லாக்டவுன் முடியும் வரை கர்ப்பிணிகளுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவையை மயிலாதுறை விஜய் மக்கள் மன்றத்தினர் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாக உள்ளது. பல மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன

இதனால் நோயாளிகள் படுக்கைகள் இன்றி தவித்து வருகின்றனர். அரசு மற்றும் தனியார் என பெரும்பாலான ஆம்புலன்ஸ்கள் கொரோன நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் கர்ப்பிணி பெண்களுக்கு அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த விஜய் மக்கள் மன்றத்தினர் பாராட்டுக்குரிய ஏற்பாட்டை செய்துள்ளனர். அதாவது, மயிலாடுதுறை சுற்றுவட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிகள் பயன்பெறும் வகையில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு 2 கார்களை இலவசமாக வழங்கியுள்ளனர்.

கொரோனா லாக்டவுன் முடியம் வரை மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு பிரசவத்திற்காகவும், மகப்பேறு முடிந்து தாய், சேயை வீட்டிற்கு இலவசமாக அழைத்துச் செல்லவும் விஜய் ரசிகர்கள் இந்த ஏற்பாட்டை செய்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News