Categories: Cinema News latest news

அடிபொலி!.. நைட்டே சம்பவத்தை ஆரம்பித்த லியோ டீம்.. இன்னைக்கு செம கச்சேரி இருக்கு போல!..

லியோ இசை வெளியீட்டு விழா ரத்தான நிலையில், நேற்று முழுவதும் சோகத்தில் இருந்த விஜய் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளார் நடிகர் விஜய். லியோ செகண்ட் சிங்கிள் இன்று வெளியாக உள்ள நிலையில், Badass Mr Leo Dass எனும் பாடலின் புரமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

தலைவா படத்தில் ஆரம்பித்த பஞ்சாயத்து எந்த ஆட்சி மாறினாலும் நடிகர் விஜய்யை விடாத கருப்பாக தொடர்ந்து பின் தொடர்ந்து வருகிறது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கூறி விட்டு அதற்கான எந்த ஏற்பாடுகளையும் செய்யாமல் ஒதுங்கி விட்டார்.

இதையும் படிங்க: கதை பிடித்துப் போக சம்பளமே வாங்காமல் நடித்த நடிகை! இப்ப யாராச்சும் அப்படி இருக்கீங்களா?

ஆனால், நடிகர் விஜய் மக்கள் மன்றத்தை ஆரம்பித்து சமீப காலமாக தீவிர அரசியலில் ஈடுபட்டு வருவது தான் அரசியல் வட்டாரத்தில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது என்றும் அதன் அழுத்தம் தான் விஜய் படங்கள் வெளியாகும் போது பூகம்பமாக வெடிப்பதாகவும் கூறுகின்றனர்.

இசை வெளியீட்டு விழா ரத்தான நிலையில், செகண்ட் சிங்கிளை திட்டமிட்டபடி செப்டம்பர் 28ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப் போவதாக செவன் ஸ்க்ரீன் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: அட்லி எல்லாம் இப்போ தான்!.. அந்த காலத்துலயே விஜய்யை எப்படி ஏமாத்திருக்காங்க பாருங்க!..

இந்நிலையில், அதுவரை தனது ரசிகர்கள் சோகத்தில் இருக்கக் கூடாது எனக்கூறி நேற்று நள்ளிரவு 12 மணிக்கு லியோ செகண்ட் சிங்கிள் புரமோவை வெளியிட விஜய் உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

லியோ படத்தின் செகண்ட் சிங்கிள் புரமோ வீடியோ வெளியான நிலையில், விஜய் ரசிகர்கள் அதனை அதிகம் ரீட்வீட் மற்றும் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர். இன்று மாலை தரமான ட்ரீட் ரசிகர்களுக்கு காத்துக் கொண்டிருக்கிறது.

 

Saranya M
Published by
Saranya M