குஷ்பு வீட்டு கல்யாணம்!. நல்லவேளை திரிஷா தனியா போயிருக்கு!.. விஜய் ஃபேன்ஸ் செம ஹேப்பி!..
முன்னாள் நடிகர் தற்போதைய தமிழக முதலமைச்சருமான விஜய் கடந்த சில வருடங்களாகவே நடிகை திரிஷாவுடன் இணைத்து பேசப்பட்டு வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு விஜயின் மனைவி சங்கீதா தனது கணவர் விஜயிடமிருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது ‘எனது கணவர் விஜய் ஒரு நடிகையுடன் தொடர்பில் இருக்கிறார்.. நான் எவ்வளவோ சொல்லியும் அவர் அந்த நடிகையுடன் தொடர்பை விடவில்லை’ என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
அது நடந்து சில நாட்களிலேயே விஜய் திரிஷாவை கூட்டிக்கொண்டு ஒரு திருமண விழாவிற்கு ஜோடியாக போனார். இருவரும் ஜோடி சகிதமாக அதாவது, விஜய் பட்டு வேட்டி, சட்டையும், திரிஷா பட்டுப் புடவையும் கட்டியிருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து சங்கீதா சொன்ன அந்த நடிகை திரிஷாதான் என பலரும் உறுதி செய்தனர்..
அதேபோல், சங்கீதா சொன்னது என்னை அல்ல என திரிஷாவும் விளக்கம் கொடுக்கவில்லை. ஒருபக்கம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கும் அவர் பதில் சொல்லாமல் ஓடிவிட்டார்., இந்நிலையில்தான், நடிகை குஷ்புவின் மகள் அவந்திகாவின் திருமணம் நேற்று கோவாவில் நடைபெற்றது. இதில் கோலிவுட் மட்டுமல்லாமல், பாலிவுட், தெலுங்கு சினிமாவிலிருந்தும் பல திரைப்பட பிரபலங்கள் கலந்து கொண்டனர்..

நடிகை குஷ்பூ, சுந்தர்.சி இருவரும் விஜய்க்கு நேரில் சென்று திருமண பத்திரிக்கை வைத்திருந்தார்கள். இந்த திருமணத்திற்கு விஜய் தனியாக போவாரா? அல்லது திரிஷாவுடன் போவாரா? இல்லை போகவே மாட்டாரா? என பல யூகங்கள் எழுந்தது.. கடந்த இரண்டு நாட்களாகவே ‘திரிஷாவுடன் விஜய் இந்த திருமணத்திற்கு போகக்கூடாது’ என அவர்கள் ரசிகர்கள் விரும்பினார்கள்.
இந்நிலையில், அவர்கள் எதிர்பார்த்தபடியே இந்த விழாவுக்கு திரிஷா தனியாகத்தான் போயிருக்கிறார். அதேபோல் விஜயும் இந்த திருமணத்திற்கு செல்லவில்லை. தற்போது இந்த திருமணத்தில் திரிஷா கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து விஜய் ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை சமூகவலைத்தளங்களில் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
