'ஜன நாயகன்' இடைவேளையில் ரஜினியின் 'ஜெயிலர் 2' ப்ரோமோவுக்கு விஜய் ரசிகர்கள் கொடுத்த ரியாக்ஷன்?

 
Jana Nayagan jailer 2

எப்போதும் ரசிகர்களின் நெஞ்சில் குடியிருக்கும் 'தளபதி' விஜய்யின் 'ஜன நாயகன்' படம் பல தடைகளை தாண்டி இன்று ஒரு வழியாக ரிலீஸ் ஆகி விட்டது.

'KVN புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் பெரிய பட்ஜெட்டில் தயாரித்திருக்கும் இந்த படத்தை 'நேர்கொண்ட பார்வை' இயக்குநர் ஹெச்.வினோத் தான். இயக்கியுள்ளார். இப்படத்தை முதல் நாளே பார்க்க வேண்டும் என்று சென்ற ரசிகர்கள் திரையரங்குகளை திருவிழா கோலமாக மாற்றியிருக்கிறார்கள்.

பல தியேட்டர்களில் இந்த படத்தின் இடைவேளையின் போது 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' படத்தின் ப்ரோமோ திரையிடப்பட்டிருக்கிறது. எப்போதும் ரஜினி மீது கடுப்பில் இருக்கும் விஜய்யின் ரசிகர்கள் இதற்கு விசில் அடித்து கொண்டாடியுள்ளனர். 

ஒரு நிமிடம் இது விஜய்யின் ரசிகர்கள் தானா? என்று ஷாக் ஆகும் அளவுக்கு ரெஸ்பான்ஸ் இருந்ததாம். 'பீஸ்ட்' இயக்குநர் நெல்சன் இயக்கியிருக்கும் இப்படத்தை வருகிற அக்டோபர் 15-ஆம் தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

From Around the web