Categories: Cinema News latest news

விஜய் யாருன்னு தெரியுமா?.. ரஜினி சொன்ன கதைக்கு அப்பவே பதில் சொன்ன உலக நாயகன்..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மகனாக, நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விஜய். துவக்கத்தில் அவர் நடித்த சில படங்கள் வெற்றியை பெறவில்லை. கிளுகிளுப்பு காட்சிகளை கொண்ட ரசிகன் மட்டும் கொஞ்சம் ஓடியது. அதன்பின் அப்பாவின் இயக்கத்தில் பெரிய வெற்றியை விஜய் கொடுக்கவில்லை.

அதன்பின் மற்ற இயக்குனர்களின் படங்களில் நடித்து ஒரு கட்டத்தில் முன்னணி நடிகராகவும் மாறினார். இப்போது அவர்தான் சூப்பர்ஸ்டார் என பலரும் பேசும் அளவுக்கு திரையுலகில் உயர்ந்துள்ளார். ஆனால், சூப்பர்ஸ்டார் ஒருவர்தான். அவர் எங்கள் தலைவர் ரஜினிதான் என ரஜினி ரசிகர்களும் ஆதங்கப்பட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: விஜய்க்கு எதிரா பாட்டெழுதி எல்லாம் போச்சு! அஜித்தால் வாழ்க்கையை தொலைத்த பிரபலம்..

விஜய் நடிக்கும் திரைப்படங்கள் நல்ல வசூலை பெறுகிறது. அவரின் சம்பளமும் 100 கோடியை தாண்டிவிட்டது. அதனால்தான் அவரை சூப்பர்ஸ்டார் என சில தயாரிப்பாளர்களும், பத்திரிக்கையாளர்களும் பேசி வருகின்றனர். ஆனால், விஜயை விட பல ஹிட் படங்களை கொடுத்த ரஜினியோ அமைதியாக இருந்தார். ஆனால்,ஜெயிலர் படத்தின் பாடல் வரிகளும், ஜெயிலர் ஆடியோ விழாவில் ரஜினி பேசியதை பார்க்கும்போது இந்த சூப்பர்ஸ்டார் விவகாரம் அவரையும் அசைத்து விட்டது மாதிரிதான் தெரிகிறது.

ஜெயிலர் ஆடியோ விழாவில் பேசிய ரஜினி ‘காக்கா ஒரு இடத்தில் இருக்காது. அங்கும் இங்கும் பறந்து கொண்டே இருக்கும். ஆனால், பருந்து அமைதியாக இருக்கும். காக்கா உயர பறந்து சென்று பருந்தை கொத்தினாலும் பருந்து காக்காவை ஒன்றும் செய்யாது. காக்கா பருந்து உயரத்திற்கு பறக்க ஆசைப்பட்டு முயற்சி செய்யும். ஆனால் கீழே விழுந்துவிடும்’ என ரஜினி பேசியிருந்தார். இது மறைமுகமாக விஜயைத்தான் அவர் பேசினார் என சொல்லப்படுகிறது.

ரஜினியின் பேச்சு விஜய் ரசிகர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. எனவே, சமூகவலைத்தளங்களில் ரஜினியை கடுமையாக திட்டி வருகிறார்கள். இதற்கிடையில், 2008ம் வருடம் ‘குருவி’ படவிழாவில் விஜயை வாழ்த்தி பேசிய கமல்ஹாசன் பேசிய வீடியோவை இப்போது சிலர் பகிர்ந்து வருகின்றனர்.

அதில் ‘விஜய் நடித்த படம் வேண்டுமானால் குருவியாக இருக்கலாம். உண்மையில் ஆர்ப்பாட்டமில்லமால், அடக்கமாக வெற்றி வானில் வட்டமிடும் இளம் பருந்து’ என பேசியிருக்கிறார் இந்த வீடியோவை சில விஜய் ரசிகர்கள் தங்களின் சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

எப்பதான் முடியுமோ இந்த சூப்பர்ஸ்டார் பஞ்சாயத்து!…

இதையும் படிங்க: ரிலீஸுக்கு முன்பே விஜய் படத்தை காலி செய்த ஜெயிலர்… செம மாஸ் காட்டும் தலைவர்!..

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா