Categories: Cinema News latest news

விஜய் கட்சியை தொடங்கினாலும் தொடங்கினாரு!.. தளபதி ரசிகர்கள் அப்படியே அரசியல்வாதியாவே மாறிட்டாங்களே!

புதுப்பேட்டை படத்தில் அழகம் பெருமாள் ஸ்க்ரீனை திறக்கும் வரை கெட்ட வார்த்தையில் திட்டிக் கொண்டிருந்து விட்டு ஸ்க்ரீனை திறந்ததும் தூயத் தமிழில் பேசி அசத்துவார். அதே போலவே பக்கா அரசியல்வாதிகளாக விஜய் ரசிகர்கள் தற்போது மாறி வருகின்றனர்.

இதுவரை ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தையும், அஜித் மற்றும் அவரது குடும்பத்தையும் ஆபாசமாக ட்ரோல் செய்து வந்த விஜய் ரசிகர்கள் தற்போது விஜய் அரசியல் கட்சியை ஆரம்பித்ததும் இவர்கள் காந்தியின் மறு உருவம் நாங்கள் தான் என்பது போல மாறியிருப்பது நெட்டிசன்களை சிரிப்பில் ஆழ்த்தி உள்ளது.

இதையும் படிங்க: கீர்த்தி சுரேஷ் ஹீரோவுக்கு குழந்தை பொறக்கப் போகுது!.. சந்தோஷமான அறிவிப்பை வெளியிட்ட அட்லீ பட நடிகர்!

ஆனால், இந்த மாற்றம் இப்போதாவது நிகழ்ந்ததே என்றும் இது தொடர்ந்தால் அனைத்து ரசிகர்களும் சண்டைகள் போடாமல் இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் என ரசிகர்களும் கனவு கண்டு வருகின்றனர்.

”அன்பின் அஜித் , ரஜினி ரசிக வாக்காளர்களே.. நான் ரசிக சண்டையில் இருந்து முற்றிலும் விலகி விட்டேன்.. Trigger செய்ய நினைத்து உங்கள் Mobile Data வை வீண் செய்ய வேண்டாம்.. ” என விஜய் ரசிகர் ஒருவர் பதிவிட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: இது என்னடா கூத்தா இருக்கு!.. லியோ தெலுங்கு படம்.. மாஸ்டர் மலையாள படமா?.. அட்லீக்கே அண்ணனா லோகி?..

இவரை போலவே பல ரசிகர்களும் விஜய்யின் பேச்சைக் கேட்டும் அவரது அரசியல் ஆசை கருதியும் இப்படி சேஞ்ச் ஓவர் ஆகி வருகின்றனர்.

கோட் படத்தின் அப்டேட் வரும் போதும் அந்த படம் ரிலீஸ் ஆகும் போதும் இவர்கள் எல்லாம் அஜித் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்களின் ட்ரோல்களை சமாளித்து அமைதியானால் தான் நம்புவோம் என நெட்டிசனக்ள் கறார் காட்டி வருகின்றனர்.

Saranya M
Published by
Saranya M