Connect with us

Cinema News

விஜய்யை பார்க்குற ஆசையில அதிக ரிஸ்க் எடுத்த தோழர்கள்!.. கடைசியில பிம்பிளிக்கா பிலாப்பி தானாம்!..

பாண்டிச்சேரியில் கோட் படப்பிடிப்பில் இருந்து வரும் நடிகர் விஜய் தொடர்ந்து இரண்டு நாட்களாக கேரவன் மீது ஏறி வந்து தனது ரசிகர்களை பார்த்து கையசைத்து விட்டு சென்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகின.

நடிகர் விஜய் மீசை இல்லாமல் ஸ்லிம்மாக இளம் விஜய்யாக மாறியுள்ள நிலையில், அவரை பார்த்தே ஆகவேண்டும் என சென்னையில் இருந்து எல்லாம் விஜய் ரசிகர்கள் படையெடுத்து பாண்டிச்சேரிக்கு சென்றுள்ளனர்.

இதையும் படிங்க: இன்னைக்கு இருக்குற இடத்தை விட இன்னும் பெருசா ஆசைப்படுவேன்!.. லவ்வர் மணிகண்டன் ஓபன் டாக்!

3வது நாளும் விஜய் மாலை 5 மணிக்கு சூட்டிங் முடித்து விட்டு வந்து சந்திப்பார் என ரொம்பவே ரிஸ்க் எடுத்து உள்ளூர் தோழர்களும், சென்னை தோழர்களும் விஜய்யை காண நேற்று மாலையும் காத்திருந்தனர்.

ஆனால், கடைசியில் நேற்று தனது தோழர்களை சந்திக்க நடிகர் விஜய் வரவே இல்லையாம். அதனால் ரசிகர்கள் ரொம்பவே கடுப்பாகி கிளம்பி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க: விஜய்யின் அரசியல் கட்சி!.. ஒரே வார்த்தையில் சோலியை முடித்த வடிவேலு.. இப்படி சொல்லிட்டாரே!..

விஜய்யை பார்த்தே தீர வேண்டும் என்றும் பக்கத்தில் பார்க்க வேண்டும் என்றும் கூட்ட நெரிசலில் சிக்குவதும், கூரை மீது, மரத்தின் மீதெல்லாம் ஏறியும் ரசிகர்கள் விஜய்யை பார்க்க அதிக ரிஸ்க் எடுப்பதை வேண்டாம் என விஜய் அறிவுறுத்த வேண்டும் என்றும் அப்படி ரசிகர்களை சந்திக்க வேண்டும் என்றால் அதற்காக ஒரு மண்டபத்தை எடுத்து ரசிகர்களை அமர வைத்து சந்தித்து போட்டோ எடுத்துக் கொள்ளலாம் என்றும் தன்னார்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய்யை காண சென்று யாருக்காவது ஏதாவது கை, கால் முறிந்து விட்டால் அந்த பழியும் அவருக்குத்தான் வந்து சேரும் என்றும் எச்சரிக்கின்றனர்.

 

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top