சேயோனில் சீமான்... கம்பு சுத்த தயாராகும் விஜய் ரசிகர்கள்
கடந்த பிப்ரவரி மாதம் வெளியான படம் தாய் கிழவி. சிவக்கார்த்திகேயன் தயாரிப்ப்பில் ராதிகா நடிப்பில் அறிமுக இயக்குனர் சிவக்குமார் முருகேசன் இயக்கிய இந்த படம் குறைந்த பட்ஜெட்டில் வெளிவந்து கிட்டத்தட்ட 80 கோடி வரை வசூலை வாரி குவித்தது. இந்த ஆண்டு அதிக வசூல் செய்த படங்களில் தாய் கிழவியும் ஒன்று.
தாய் கிழவி திரைப்படத்தை அடுத்து சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் சேயோன். ராஜ்கமல் சார்பில் கமல்ஹாசன் தயாரிக்கும் இந்த படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் நாயகியாக நடிக்கிறார். சேயோன் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிக்கிறார். உறவுமுறைகள் குறித்த முக்கியத்துவத்தை பேசும் கதாபாத்திரத்தில் சீமான் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே கடந்த பொங்கலுக்கு விஜய் நடித்த ஜன நாயகன் வெளியாகவிருந்தது. அந்த படத்தோடு தனது பராசக்தி படத்தை வெளியிட சிவகார்த்திகேயன் முடிவெடுத்தார். இந்த சம்பவம் விஜய் ரசிகர்கள் சிவகார்த்திகேயன் மீது கடும் கோபத்தில் உள்ளனர். விஜய் அரசியலில் வந்ததிலிருந்தே சீமான் விஜய் குறித்து கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அதே வேலை திமுகவின் கூட்டணியில் இருக்கும் கமல்தான் சேயோன் படத்தின் தயாரிப்பாளர் என்பதால் விஜய் ரசிகர்கள் இப்படத்திற்கு எதிராக கடுமையான விமர்சன தாக்குதலை நடந்துவார்கள் என பல்ரும் கூறுகின்றனர். எனவே சேயோன் ப்படத்திற்கு சீமானின் வருகை பாதிப்பை ஏற்ப்படுத்தும் என்றே பலரும் கூறுகின்றனர்.