Categories: Cinema News latest news

ஐஸ் வைத்த விஜய்.! காத்திருப்பதாக கூறிய SAC.! பின்னனி இதுதான்.!

நாளை தமிழக திரையரங்குகள் மட்டுமின்றி கேரளா, ஆந்திர, கர்நாடகா என அனைத்து ஊர்களிலும் திரையரங்குகள் திருவிழாவாக மாற உள்ளது. காரணம் விஜயின் பீஸ்ட், கே.ஜி.எப் 2 என இரு பிரமாண்ட திரைப்படங்கள் அடுத்தடுத்த நாட்களில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது.

இந்த திரைப்படங்களை காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். தமிழகத்தில் ரசிகர்கள் முன்னுரிமை கொடுப்பது பீஸ்ட் திரைப்படத்திற்கு தான் என்பது அனைவர்க்கும் தெரியும். அண்மையில், பீஸ்ட் படத்தின் ப்ரோமோஷனுக்காக விஜய் ஒரு நேர்காணலில் கலந்துகொண்டார். அதில் நெல்சன் தான் விஜயிடம் கேள்விகளை கேட்டறிந்தார்.

அப்போது நெல்சன், தந்தை உறவு பற்றி கேட்டபோது, நாம் மரத்தின் அழகை பார்ப்போம். அதன் மூலம் பயன் பெறுவோம். ஆனால் அந்த மரத்தை தாங்கும் வேரை நாம் கண்டுகொள்ள மாட்டோம். அந்த வேர் தான் அந்த மரத்திற்கு மிக முக்கியம் அது போல தான் தந்தை உறவும். என மிகவும் உருக்கமாக தெரிவித்தார்.

இதையும் படியுங்களேன் – பாட்டு சூப்பர் ஹிட்டு.! ஆனா, அண்ணாச்சிக்கு பெரிய வருத்தமாம்.! காரணம் இதுதான்.!

 

இதனை தொடர்ந்து, தற்போது, ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில் விஜயின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் பேசுகையில், நாளை பீஸ்ட் திரைப்படம் உலகம் முழுக்க வெளியாக உள்ளது. அந்த படத்தை உங்களை போல நானும் ஒரு ரசிகனாக எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என கூறியுள்ளார். விஜய்க்கும் அவரது தந்தைக்கும் மனக்கசப்பு என்று கூறப்பட்டு வந்தாலும் , இவருவரும் இப்படி பேசியிருப்பது நல்ல உறவை இன்னும் மேம்படுத்தும் என கூறப்படுகிறது.

Manikandan
Published by
Manikandan