×

நம்ம தளபதிக்கு மிகவும் பிடித்த பாடல் இது தானாம் 

கவின் நடித்த Ask Maaro பாடலும் தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்று கூறியுள்ளார்.

 
19f6c095-522b-485c-874d-bfdb214afe46

நெல்சன் திலீப் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் படம் பீஸ்ட். இது தளபதியின் 65வது படம், படத்திற்கான பூஜை சிம்பிளாக எப்போதோ போடப்பட்டது. படத்தின் பூஜையில் படக்குழுவினர் எல்லோரும் கலந்துகொண்டனர்.

நடிகர் கவினும் இந்த பீஸ்ட் பட பூஜையில் கலந்துகொண்டிருக்கிறார். தளபதி நிகழ்ச்சியில் எல்லோரிடமும் சகஜமாக பேசியதாகவும், எல்லோரையும் நன்றாக கவனித்ததாக கவின் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அதோடு கவின் நடித்த Ask Maaro பாடலும் தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்று கூறியுள்ளார்.

தளபதியின் பிறந்தநாள் ஸ்பெஷலாக பீஸ்ட் பட ஃபஸ்ட் லுக்குகள் வெளியாகி இருந்தது, ரசிகர்கள் அந்த கொண்டாட்டத்திலேயே அதிகம் உள்ளனர்.

படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் சாலிகிராமத்தில் நடக்க இருப்பதாக செய்திகள் வருகின்றன.  

From around the web

Trending Videos

Tamilnadu News