Vijay: ஹீரோ டூ தலைவர்… மாநில மாநாட்டுக்கு பின்னர் முதல் எண்ட்ரி… ஸ்மார்ட் லுக்கில் விஜய்!..

by Akhilan |
Vijay: ஹீரோ டூ தலைவர்… மாநில மாநாட்டுக்கு பின்னர் முதல் எண்ட்ரி… ஸ்மார்ட் லுக்கில் விஜய்!..
X

Vijay: விஜய் தன்னுடைய முதல் மாநில மாநாட்டிற்கு பின்னர் முதல் முறையாக அரசியல் தலைவராக ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பது ரசிகர்களிடம் வைரல் ஆகி வருகிறது.

அரசியல் தலைவராக விஜய்

இந்த ஆண்டு தொடக்கத்தில் தன்னுடைய கட்சியை தமிழக வெற்றி கழகம் என நடிகர் விஜய் அறிவித்தார். அதை தொடர்ந்து பல கட்ட எதிர்பார்ப்புக்கு பின்னர் கட்சியின் முதல் மாநில மாநாடு விக்ரவாண்டியில் சமீபத்தில் நடந்து முடிந்தது. பலரும் எதிர்பாராத வகையில் மிகப்பெரிய பிரம்மாண்டமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அதை தொடர்ந்து நடிகர் விஜய் சமீபத்தில் திருவண்ணாமலை வெள்ள பாதிப்பில் சிக்கியவர்களை நேரில் அழைத்து நிவாரணம் வழங்கி அவர்களிடம் பேசிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. அதற்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும் நேரடியாக செல்லாமல் இப்படி உங்கள் அரசியல் எதிர்காலத்தை பாதிக்கும் எனவும் தெரிவித்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் இன்று சென்னையில் நடக்கும் எல்லோருக்குமான தலைவராக அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள இருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டிருந்தது. முதல் முறையாக விஜய் புது நிகழ்ச்சி ஒன்றில் ஹீரோவாக இல்லாமல் முழு அரசியல் தலைவராக கலந்து கொள்கிறார்.

வி.சி.க.வின் ஆதவ் அர்ஜுனா நிறுவனம் வெளியிடும் இந்த புத்தக வெளியீட்டு விழாவில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் கலந்துகொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஒரேமேடையில் விஜய் மற்றும் திருமாவளவன் இணைந்து இருப்பது குறித்து பலரும் ஆவலுடன் காத்திருந்தனர்.

ஆனால் விஜய் வருவதால் அரசியல் காரணங்களால் தன்னால் வர முடியாது என திருமாவளவன் அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டிருக்கிறது. எப்போதும் போல வெள்ளை சட்டை பேண்ட் அணிந்து தலைவராக நடிகர் விஜய் கலந்து கொண்டிருக்கிறார். புத்தகத்தை வெளியிட்டு நடிகர் விஜய் பேசப்படும் அரசியல் பேச்சு குறித்து பலரும் ஆவலுடன் காத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story