1. Home
  2. Latest News

Vijay: விஜயை வளர்த்தவரில் நானும் ஒருவன்.. அவர் பண்றது தப்பு.. இப்படி சொல்லிட்டாரு

vijay
புலி படத்தை தயாரித்ததால் அவருக்கு பெரிய அளவில் இழப்பு.

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கும் மேலாக முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் நடிகர் விஜய். தற்போது அவரது நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் ஜனநாயகன். எச்.வினோத் இயக்கத்தில் விஜய் அந்தப் படத்தில் போலீஸாக நடித்துள்ளார். இது தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக்காக வெளியாக இருக்கிறது.

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். கூடவே மமீதா பைஜூவும் முக்கியமாக கேரக்டரில் நடித்துள்ளார். பாபி தியோல் இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். படத்திற்கு இசை அனிருத். சமீபத்தில்தான் ஜன நாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. 

விஜய் நடித்த படம் என்றாலே அதில் அவருடைய நடனத்திற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஜன நாயகன் திரைப்படம் கடைசி படம் என்பதால் இனிமேல் அவரை திரையில் பார்க்க முடியாது, அவருடைய நடனத்தையும் பார்க்க முடியாது என்று திரையுலகில் இருந்து ரசிகர்கள் வரை அனைவரும் வருத்தத்தில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் விஜயை வைத்து புலி படத்தை தயாரித்த பிடி செல்வகுமார் விஜயை பற்றி சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். புலி படத்தை தயாரித்ததால் அவருக்கு பெரிய அளவில் இழப்பு. அது வேறு கதை. ஆனால் விஜயை வளர்த்தவர்களில் தனக்கும் ஒரு பங்கு இருக்கிறது என பிடி செல்வகுமார் கூறியுள்ளார். 

sac

அரசியலில் கால்பதித்த விஜய் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரை பயன்படுத்தாதது மிகப்பெரிய தவறு என சுட்டிக் காட்டியிருக்கிறார். அவர் சொன்னதை போல விஜயை ஆரம்பத்தில் இருந்து இந்தளவுக்கு செதுக்கியதில் அவரது தந்தைக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் அரசியலும் நன்கு தெரிந்தவர். அவர் படங்களில் அரசியல் கருத்துக்கள் சார்ந்த வசனங்களை வைத்து மிரட்டியிருக்கிறார். அப்படி இருந்தவரை ஒரு ஆலோசகராக கூட பயன்படுத்தியிருக்கலாம் விஜய்.
 

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.