முதல்வர் என்பதையே ஒரு நொடியில் மறந்தாரா விஜய்? வைரல் வீடியோ!
நடிகர் விஜய் to முதல்வர்!
சாதாரண உதவி இயக்குனரின் மகனாகப் பிறந்து தமிழ் சினிமாவில் உச்ச நடிகர் என்ற அந்தஸ்தை பிடித்தவர் நடிகர் விஜய். அதன் பிறகு தாவெக என்ற கட்சி ஆரம்பித்து அரசியலில் நுழைந்தார். தொடர்ந்து மக்களுடன் நேரடியாக சென்று பிரச்சாரம் செய்ததன் மூலமாக ஒட்டுமொத்த மக்களின் மனதில் இடம் பிடித்தார்.
தேர்தல் முடிவில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இன்று முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். இது தமிழக அரசியலில் மிகப்பெரிய வரலாற்று சாதனையாக பார்க்கப்பட்டு வருகிறது. விஜய் முதலமைச்சர் ஆக பதவியேற்றது மட்டுமல்லாமல் அவரது எளிமையான செயல் தான் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
முதல்வர் பதவியை மறந்த விஜய்:
ஆம், நேற்று முதல்வராக பதவியேற்ற போது மேடையில் வைக்கப்பட்டிருந்த மேஜையை தாமாக முன்வந்து அப்புறப்படுத்தினார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாக ஒரு நிமிடம் தான் ஒரு முதல்வர் என்பதையே மறந்து எளிமையான மக்கள் போல நடந்து கொண்டார். இப்படிப்பட்ட தலைவன் தான் எங்களுக்கு வேண்டும் என மக்கள் அவரின் நற்குணத்தை பாராட்டி வருகிறார்கள்.
