Categories: Cinema News latest news

எங்களுக்குள் நாங்க செய்துகொண்ட ஒப்பந்தம் இதுதான்.! விஜய் நண்பர் கூறிய ரகசிய தகவல்.!

பொதுவாக முன்னணி நடிகராக, அல்லது முன்னணி நபராக இருப்பவர் தங்கள் குடும்பத்தாரை சேர்ந்தவரையோ, அல்லது நண்பர்களையோ தூக்கிவிட நினைப்பார்கள். அப்படி, பலர் செய்தது உண்டு. அது அந்த பிரபல நடிகர் மற்றும் நண்பர்களை பொறுத்து.

நடிகர் விஜய் தனது நண்பர்களுடன் எப்போதும் இணக்கமாக இருப்பவர். ஆனால், தன்னுடைய துறையில் தனக்கு இருக்கும் நட்சத்திர அந்தஸ்தை பயன்படுத்தி ஏதேனும் உதவிகள் செய்வதோ, வேறு ஏதேனும் பட வாய்ப்பு பெற்று தருவதோ எதுவும் இருக்காது.

இதையும் படியுங்களேன் – நயன்தாராவும் நீயும் ஒன்னா…உனக்கு ஏம்மா இந்த வேலை…? அடங்காத ஐஸ்வர்யா ராஜேஷ்….

இது பற்றி விஜயின் நெருங்கிய நண்பரும், நடிகருமான சஞ்சீவ்விடம் கேட்டதற்கு, ‘ அது எங்களுக்கும் போட்டுக்கொண்ட ஒரு ஒப்பந்தம் போன்றது. அதாவது நாங்கள் (நண்பர்கள் )  அனைவரும் அவர் அவர் துறையில் எதோ ஒன்றை செய்து வருகிறோம். அதில் உனது பப்ளிசிட்டியை வைத்து எனக்கு உதவி செய்வது. அந்த மாதிரி எதுவும் இருக்க கூடாது. நண்பர்கள் வேறு. தொழில் வேறு என நாங்கள் எங்களுக்குள் செய்து கொண்ட ஒப்பந்தம் அது.

எனக்கு அத்யாவசிய தேவை ஏதேனும் இருக்கிறது. என்றால், நான் கேட்டாலோ, அல்லது யார் மூலமாகவோ தெரிந்தால், உடனே என்னை கேட்காமலேயே எனக்கு விஜய் உதவி செய்து விடுவான்’என மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.

Manikandan
Published by
Manikandan