Categories: Cinema News latest news

உண்மையில் சொல்லி அடிச்ச கில்லி.. விஜய் இல்ல.? இவர் தான்.! வெளியான சூப்பர் சீக்ரெட்…

2004ஆம் ஆண்டு தரணி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் கில்லி. இந்த படத்தின் வெற்றியை நாம் சொல்லி தெரியவேண்டியது இல்லை. இந்த திரைப்படம் அதுவரை இல்லாத விஜய் பட வசூலாக பார்க்கப்பட்டது.

ஏன், சிலர் தமிழ் சினிமாவின் முதல் 50 கோடி திரைப்படம், ரஜினிக்கு முன்னரே முதல் 50 கோடி எனும் வசூலை தொட்ட நாயகன் விஜய் என கூறிகொள்வரார்கள். மேலும் இந்த திரைப்படம் தான் அப்போதைய சமயத்தில் அதிக நாட்கள் கழித்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட திரைப்படம் கிட்டத்தட்ட 4 வருடங்கள் கழித்து தான் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப பட்டது.

இந்த திரைப்படம் மகேஷ்பாபு நடித்த தெலுங்கு படத்தின் ரீமேக். ஆதலால், அந்த படத்தில் ஏற்கனவே ஹிட்டான பாடல்களை உபயோகப்படுத்தலாம் என தயாரிப்பாளர் கூறியுள்ளார். அனால், வித்யாசாகர் அதனை மறுத்துள்ளார். வேணாம் சார் நான் வேறு மாதிரி ஆல்பம் தருகிறேன் என கூறி,

இதையும் படியுங்களேன் – நாங்களும் இந்திய குடிமகன் தான்… விஜய், ரஜினி செய்த சிறப்பான சம்பவம் இதோ…

அர்ஜுனரு வில்லு, அப்படி போடு என தற்போதும் அனைவரும் கொண்டாடும் சூப்பரான ஆல்பத்தை கொடுத்தார் இசையமைப்பாளர் வித்தியாசகர். அந்தளவுக்கு தனது இசை மீது நம்பிக்கை வைத்து பட ரிலீசுக்கு முன்பே சொல்லி அடித்தார் இந்த கில்லி வித்யாசாகர்.

Manikandan
Published by
Manikandan