பனையூர் படி தாண்டா பாலிடிக்ஸ்.. அடுத்த போட்டோவுடன் போஸ் கொடுக்கும் விஜய்
முற்றிலும் மாறுபட்ட அரசியல்:
அரசியல் களத்தில் விஜயின் அரசியல் என்பது முற்றிலும் மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது. அரசியல் ரீதியாக அவரின் அணுகுமுறை பல அரசியல் பிரபலங்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கும் ஆளாகி வருகிறது. வொர்க் ஃப்ரம் ஹோம் என்ற அடிப்படையில் தான் விஜய் தன்னுடைய அரசியலையே நடத்தி வருகிறார் என்றும் அவரை பல பேர் கிண்டலடித்து வருகின்றனர்.
தனியாக கட்சியை ஆரம்பித்த விஜய் பெரிய அளவில் மாநாட்டையும் நடத்தி ஒரு கட்சித் தலைவராக இருக்கும் பட்சத்தில் இதுவரை பத்திரிக்கையாளர் பேட்டி என்பதே அவர் கொடுக்கவில்லை .இதுவே அதிருப்தியை ஏற்படுத்துகிறது. சமீபத்தில் கூட ஆளுநரை சந்திக்க சென்ற விஜய் சந்தித்து விட்டு திருப்பும்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்து கையசைத்து விட்டு சென்றார்.
பனையூர் மியூஸியம்:
ஆனால் பத்திரிகையாளர்கள் கண்டிப்பாக விஜய் பேட்டி கொடுப்பார் என எதிர்பார்த்த நிலையில் அனைவருக்கும் டாட்டா காட்டி சென்று விட்டார். இதுவும் கடும் விமர்சனத்திற்கு ஆளானது. மேலும் சமீபத்தில் பெரியாரின் 51 வது நினைவு நாள் கொண்டாடப்பட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள் பெரியாருக்கு அவரின் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
ஆனால் விஜய் பனையூரில் உள்ள தனது கட்சி அலுவலகத்திலேயே பெரியார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இது பெரும் பேசும் பொருளானது. ஆனால் பெரியாரின் பிறந்தநாளுக்கு அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது வந்த விஜயால் இப்பொழுது ஏன் வர முடியவில்லை? என கேள்வி எழுப்பினர்.
இதற்கு அடுத்தபடியாக வேலு நாச்சியாரின் நினைவு நாள் அன்றும் தனது பனையூர் அலுவலகத்திலேயே வேலுநாச்சியாரின் புகைப்படத்தை வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இது மேலும் ரசிகர்கள் மத்தியிலும் மற்ற கட்சி தொண்டர்கள் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியது. இப்படியே பனையூரிலேயே இருந்து அரசியல் செய்யும் விஜய் எப்படி மக்களை சந்தித்து மக்களுக்காக பல நல்ல திட்டங்களை செய்யப் போகிறார்.
எப்படி அவர் மீது நம்பிக்கை வரும் என்ற வகையில் பேசி வந்தனர். இந்த நிலையில் இன்று வேலுநாச்சியாரின் பிறந்தநாள் என்பதால் மீண்டும் அவருடைய புகைப்படத்திற்கு தனது பனையூர் அலுவலகத்திலேயே மலர் தூவி மரியாதை செலுத்தி இருக்கிறார் விஜய். இதை பார்த்த ரசிகர்கள் பனையூர் படி தாண்டா பாலிடிக்ஸ் என கிண்டலடித்து வருகின்றனர்.