Categories: Cinema News latest news

விஜயை காக்க வைத்த லோகேஷ்…! கடுப்பாகி தளபதி செய்த வேலையை பாருங்க…!

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகராக வலம வருபவர் நடிகர் விஜய். பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது தளபதி 66 என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் சரத்குமார், பிரகாஷ் ராஜ் என்ற நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறார்கள்.

கமெர்ஷியல் மற்றும் ஆக்‌ஷன் படமாக வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். இந்த படத்தை தொடர்ந்து
தளபதி 67 என்ற படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பும் இந்த வருட இறுதியில் தொடங்கும் என திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் ஏற்கெனவே லோகேஷ் மற்றும் விஜய் இணைந்து மாஸ்டர் என்ற தரமான படத்தை கொடுத்தார்கள். அந்த படப்பிடிப்பின் போது நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை நினைவு கூர்ந்தார். மாஸ்டர் படத்திற்கு டான்ஸ் மாஸ்டர் தினேஷ். ஒரு சமயம் சரியான மாசுக் காரணமாக படப்பிடிப்பு பாதி நேரம் நடக்க வில்லையாம்.

அதனால் தினேஷ் லோகேஷிடம் கிரிக்கெட் விளையாட அழைத்து இரு அணிகளாக பிரிந்து விளையாடினராம். விளையாடி முடித்து விஜயை பார்க்க லோகேஷ் வந்தாராம். எங்க இருந்து வர என விஜய் கேட்க கிரிக்கெட் விளையாடிட்டு வரேன் என்று சொன்னாராம். உடனே விஜய் டேய்! 1000 பேரை அழைத்து வந்து எங்களை உட்கார வைச்சு நீ ஜாலியா கிரிக்கெட் விளையாடினேனானு சொல்றனு கேட்டாராம். சரி நானும் வரேன்னு விஜய் அவர்களோடு சேர்ந்து கிட்டத்தட்ட 60 ஓவர்கள் செட் செய்து 5 மணி நேரம் விளையாடினார்களாம்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini