×

விஜய் தனது அடுத்த இயக்குனரை முடிவு செய்து விட்டாருங்கோ... மீண்டும் அதே காம்போ... 

தளபதி விஜயின் 66வது படத்துக்கான இயக்குனர் வேட்டை ஒரு வழியாக முடிந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
 
 

விஜய் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தனது 65வது படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, பூஜா ஹெக்டே இருவரிடமும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இருவரில் ஒருவர் தளபதிக்கு ஜோடியாக அடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கும் எனத் தெரிகிறது.

இந்நிலையில், தளபதியின் 66வது படம் குறித்த ஒரு முக்கிய தகவல் வெளியாகி இருக்கிறது. விஜயை இயக்கப் போகும் அடுத்த இயக்குனர் யாராக இருக்கும் என கிசுகிசுக்கள் நிலவி வந்தது. அதில், லோகேஷ் கனகராஜின் பெயர் தான் முதலிடத்தில் இருந்த நிலையில், விஜயும் அவர் பெயரையே டிக் செய்து இருப்பதாக தெரிகிறது. அப்படத்தை மாஸ்டர் படத்தை தயாரித்த லலித் குமாரே தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் லோகேஷ் விஜயை சந்தித்து ஒரு கதையை கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

மேலும், லோகேஷ் கனகராஜ் கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்க இருக்கிறார் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சட்டமன்ற தேர்தல், கமலின் உடல்நிலை ஆகிய பிரச்சனைகளால் படம் பல மாதங்கள் தள்ளிப்போக வாய்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.
 

From around the web

Trending Videos

Tamilnadu News