Categories: Cinema News latest news

விஜய்க்கு இந்தளவுக்கு ஈகோ இருக்கா? என்ன இருந்தாலும் இப்படியா பண்றது…

விஜய் தற்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகராக வலம் வருகிறார். விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று அவரது ரசிகர்கள் சமீப காலமாக சர்ச்சைகளை கிளப்பி வருகின்றனர். அந்தளவுக்கு தமிழ் சினிமாவின் மாஸ் ஆடியன்ஸ்களை தனது கைக்குள் போட்டு வைத்திருக்கிறார் விஜய்.

விஜய்யின் சுபாவம்

விஜய்யின் சுபாவத்தை குறித்து அவருடன் பணியாற்றிய பலரும் அவர்களது பேட்டிகளில் கூறியிருக்கிறார்கள். படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியாக இருப்பாராம். யாரிடமும் அவ்வளவாக பேசமாட்டாராம். அவரது கேரவானுக்குள்ளேயேதான் உட்கார்ந்திருப்பாராம். ஷாட் இருக்கும்போதுதான் வெளியே வருவாராம்.

இந்த நிலையில் விஜய் ஒரு உதவி இயக்குனரிடம் நடந்துகொண்ட சம்பவத்தை குறித்து பத்திரிக்கையாளர் டிவி சோமு, ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார். அந்த சம்பவத்தை குறித்து இப்போது பார்க்கலாம்.

விஜய்க்கு வந்த ஈகோ

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு உதவி இயக்குனர் விஜய்யை வைத்து படம் இயக்குவதற்காக அவரிடம் ஒரு கதையை கூறியிருக்கிறார். அந்த கதையில் இன்னொரு நடிகர் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக இருந்ததாம். அந்த கதாப்பாத்திரம் ஹீரோவின் கதாப்பாத்திரத்தை ஓவர் டேக் செய்வது போன்ற ஒரு நினைப்பு விஜய்க்கு வந்ததாம்.

ஆதலால் அந்த இயக்குனரிடம், அந்த கதாப்பாத்திரத்தின் முக்கியத்துவத்தை கொஞ்சம் குறைக்கச்சொல்லியிருக்கிறார். அதன்படி அந்த இயக்குனரும் அந்த கதாப்பாத்திரத்தின் முக்கியத்துவத்தை குறைத்துவிட்டு மீண்டும் விஜய்யிடம் சென்று கதை சொல்லியிருக்கிறார். ஆனால் அப்படியும் அந்த கதாப்பாத்திரத்திற்கு அதிக முக்கியம் இருப்பதாக விஜய் நினைத்தாராம். அதன் பின் அந்த இயக்குனரை விஜய் சந்திக்கவே இல்லையாம். இவ்வாறு விஜய்க்கு ஈகோ அதிகம் என அந்த பேட்டியில் டிவி சோமு கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: 50 வயது நடிகருடன் டேட்டிங்கா? விஜய் பட கதாநாயகியை ரவுண்டு கட்டும் நெட்டிசன்கள்…

Arun Prasad
Published by
Arun Prasad