19 வயசுல இப்படியா இருந்தீங்க... ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த விஜய் ஹீரோயின்
தமிழில் நடிகர் விஜய் நடித்த தமிழன் படத்தில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா, இப்போ ஹாலிவுட் வரை பேமஸாகிவிட்டார்.
Sun, 28 Mar 2021

உலக அழகி பட்டம் வென்ற பிரியங்கா சோப்ரா, தமிழன் படத்துக்குப் பிறகு பாலிவுட்டில் பயங்கர பிஸியாக நடித்தார். அதன்பின்னர், ஒரு சில ஹாலிவுட் படங்களிலும் நடித்த பிரியங்கா, அமெரிக்க பாப் பாடகரும் ஹாலிவுட் நடிகருமான நிக் ஜோனாஸைத் திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவிலேயே செட்டிலாகிவிட்டார்.
சமீபத்தில் புதுவீடு குடிபோன பிரியங்கா - நிக் ஜோனாஸ் தம்பதியின் போட்டோக்கள் வைரலாகின. இந்தநிலையில், தனது த்ரோ பேக் போட்டோ ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். பிரியங்கா சோப்ரா. 19 வயதில் எடுக்கப்பட்ட போட்டோவை பிரியங்கா பகிர்ந்திருக்கிறார்.
அதில் அடையாளம் தெரியாத அளவுக்கு பிரியங்கா வேறு ஒரு பெண் போல இருக்கிறார். என்ன மேடம் இப்படியா இருந்தீங்க... வேற ஆள் மாதிரி இருக்கிங்களே என ரசிகர்கள் கமெண்டடித்து வருகிறார்கள்.