தளபதி விஜய் நடிப்பில் அடுத்து வெளியாக காத்திருக்கும் திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை நெல்சன் டார்க் ஆக்சன் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ளதாக தெரிகிறது. இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படம் ஏப்ரல் மாதல் ரிலீஸ் என கூறப்பட்டது.
ஆனால் உறுதியான தேதி அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது. 2 பாடல் எல்லாம் வெளியானது ஆனால், ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை. இவர்கள் குறிவைத்த ஏப்ரல் 14ஆம் தேதி கே.ஜி.எப் 2 திரைப்படம் வெளியாக உள்ளதாக ஏற்கனவே அறிவித்து விட்டனர்.
அதனால், பீஸ்ட் திரைப்படம் தள்ளிபோகுமா என கேள்விகள் எழுந்தது. ஆனால், அந்த தேதியை விட்டு தரமுடியாது என்பது போல தான் தளபதி தரப்பு இருந்ததாம். அதனால், இரண்டு பெரிய படங்களும் ஒரே நாளில் வெளியானால் வசூல் பாதிக்கப்படும் என விநியோகிஸ்தர்கள் தரப்பில் கூறப்பட்டு வந்தது.
இதையும் படியுங்களேன் – வீட்டுக்காரன் முன்னாடி உள்ளாடையோடு மாட்டிக்கொண்ட நடிகர்.! வெளியான அதிர்ச்சி வீடியோ.!
இருந்தாலும், ஏப்ரல் 14ஐ விட்டுத்தர முடியாது என்பதில் படக்குழு உறுதியாக இருந்துள்ளது. சில நாட்களுக்கு முன்னரே பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டது. அதேபோல, தற்போது சன் பிக்ச்சர்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்தும் விட்டது. ஏப்ரல் 13ஆம் தேதி பீஸ்ட் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துவித்துவிட்டது.
வடிவேலு ஒரு…
TVK Vijay:…
நான் கைக்கூலி…
TVK Vijay:…
TVK Vijay:…