Categories: Cinema News latest news

ரசிகர்களை தொடர்ந்து ஏமாற்றி வரும் பீஸ்ட் விஜய்.! இப்போதும் வழக்கம் போல அதேதான்.!

தமிழ் சினிமாவில் தற்போது அதிகம் எதிர்பார்க்கப்படும் தமிழ் திரைப்படம் என்றால் அது தளபதி விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் தான். தளபதி விஜய் நடித்துள்ள இப்படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.

இப்படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். செல்வராகவன் வில்லனாக நடித்துள்ளார் என கூறப்படுகிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே படத்திலிருந்து போஸ்டர்கள் மற்றும் ‘அரபி குத்து’ எனும் மெகா ஹிட் பாடல் வெளியாகி உள்ளது.

இப்படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் மாதம் என்று மட்டுமே படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. ஆனால் இன்னும் தேதி முடிவு செய்யப்படவில்லையாம். இந்த திரைப்படம் ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என கூறப்பட்டு வந்தாலும் அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை.

இதே தேதியில் ஏப்ரல் 14 அன்று கே.ஜி.எப்-2 திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாகத்தான் இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் இருக்கிறது என்ற தகவல் உலா வருகிறது.

இதனால் இணையத்தில் விஜய் ரசிகர்கள் சீக்கிரம் ரிலீஸ் தேதியை அறிவித்து விடுங்கள் என்று கேட்டு வருகின்றனர். ஆனால் படக்குழு அதற்கு இசைந்த பாடில்லை.

இந்நிலையில் இன்று மாலை பீஸ்ட் அப்டேட் வரும் என சன் பிக்ச்சர்ஸ் தரப்பில் கூறப்பட்டவுடன்,  நிச்சயம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் வழக்கம் போல அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

இதையும் படியுங்களேன் – ஐஸ்வர்யா ராஜேஷை வேட்டையாட துடிக்கும் நடிகர்.! வெளியான அதிர்ச்சி வீடியோ.!

ஆம், பீஸ்ட் திரைப்படத்திலிருந்து இரண்டாவது பாடல் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஆறுதல் என்னவென்றால் இந்த பாடலை விஜய் பாடியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். அதன் கலக்கலான புரோமோ விடியோ மட்டும் விஜய் ரசிகர்களுக்கு ஆறுதலாக தற்போது வெளியாகியுள்ளது.

ஆனால், விஜய் ரசிகர்கள் எப்போது ரிலீஸ் தேதியை சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்றே காத்திருக்கிறார்கள். ஏப்ரல் 13ம் தேதி பீஸ்ட் ரிலீஸ் தேதி இருக்குமென சில தியேட்டர் நிர்வாகத்தினர் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Manikandan
Published by
Manikandan