Connect with us

Cinema News

கடைசி நேரத்தில் விஜயின் காலை வாரிய நெருங்கிய நபர்.! பல கோடிகள் போனதுதான் மிச்சம்.!

தளபதி விஜய் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் புலி. இந்த திரைப்படத்தை சிம்புதேவன் இயக்கி இருந்தார். விஜயின் மேனேஜர் செல்வகுமார் என்பவர் இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். இந்த திரைப்படம் குழந்தைகளுக்கு ஏற்றவாறு மந்திர மாயாஜாலங்கள் நிறைந்த ஓர் திரைப்படமாக உருவானது.

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இத்திரைப்படம் அதிகமான திரையரங்குகளில் வெளியானது. ஆனால், இது திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியதால் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட  படம் நஷ்டத்தை தழுவியது.

முதலில், இந்த திரைப்படத்தை மேனேஜர்  செல்வகுமார் தயாரிக்க ஆரம்பித்து, இறுதிக்கட்ட நேரத்தில் அதாவது படம் ரிலீசாகும் சமயத்தில் அதனை ரிலீசாக போதிய பணம் இல்லாமல் திண்டாடி விட்டார்.

இதையும் படியுங்களேன் – எதற்கும் துணிந்து இறங்கி வெற்றியை ருசித்தாரா சூர்யா?… முழு விமர்சனம்…

திடீரென என்ன செய்வது என்று தெரியாமல் அந்த படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கும் நிலைமைக்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டது. என்று கூறப்படுகிறது. உடனே தனது படம் ரிலீஸ் ஆகாமல் போக கூடாது என்று தனது பணத்தை போட்டு படத்தை ரிலீஸ் செய்ய உதவியுள்ளார் நடிகர் விஜய்.

அதனால் ,அவருக்கு சில கோடிகள் நஷ்டம் ஆகி விட்டதாம். இறுதியில் கடைசி நேரத்தில் காலை வாரிய தனது மேனேஜர்  செல்வகுமாரை அந்த மேனேஜர் பொறுப்பிலிருந்து நீக்கி விட்டு, அதன் பிறகு அவரது சகவாசத்தை ஒதுக்கி வைத்து விட்டாராம் நடிகர் விஜய்.

author avatar
Manikandan
Continue Reading

More in Cinema News

To Top