×

விஜய் ஒரு சின்னப்பையன், அவனுக்கு ஒண்ணும் தெரியாது: ராதாரவி பேட்டி

மெர்சல் படத்திலிருந்தே விஜய்க்கும் பாஜகவிற்கு உரசல் இருந்து வருகிறது என்பது தெரிந்ததே. மெர்சல் படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய வசனங்கள் குறித்து பாஜக தலைவர்கள் ஆவேசமாக எதிர்ப்பு தெரிவித்ததும், விஜய்யை, ஜோசப் விஜய் என்று விமர்சனம் செய்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 

 

இந்த நிலையில் தற்போது திடீரென விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்ததற்கு பிஜேபி அரசு தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இதனால் விஜய் ரசிகர்களுக்கும் பாஜகவினர்களுக்கும் சமூக வலைதளங்களில் மோதல் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் விஜய் குறித்து பேட்டியளித்த சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகர் ராதாரவி ’விஜய்யின் முதல் படத்திலேயே நான் அவருக்கு அப்பாவாக நடித்தவர் என்றும் அப்போது முதல் இப்போது வரை அவர் அமைதியாகத்தான் இருப்பார் என்றும் அனாவசியமாக எதுவும் பேச மாட்டார் என்றும் கூறினார்

விஜய் ஒரு சின்ன பிள்ளை, அவருக்கு எதுவும் தெரியாது என்றும் அவரை ஒரு சிலர் தூண்டி விடுவதாகவும் அவர் எந்த ஒரு தவறான முடிவையும் எடுக்க மாட்டார் என்றும் கூறினார். இதுவரை அவர் பாஜகவிற்கு நான் எதிர்ப்பாளன் என்றோ திமுகவுக்கு ஆதரவாளன் என்று அவர் கூறவில்லை என்றும் அவர் தன்னுடைய வேலையை சரியாக செய்து கொண்டு இருப்பதால் அவரை யாரும் சீண்டாமல் இருந்தாலே போதும் என்றும் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். மேலும் விஜய் படத்தின் படப்பிடிப்பிற்கு ஏதாவது பிரச்சனை என்றால் முதல் நபராக நானே அதனை எதிர்ப்பேன் என்றும் ராதாரவி கூறினார்.

From around the web

Trending Videos

Tamilnadu News