×

’மாஸ்டர்’ படத்திலும் விஜய் செய்யும் வழக்கமான விஷயம்: ரசிகர்கள் குஷி

கடந்த சில ஆண்டுகளாக தளபதி விஜய், தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் ஒரு பாடலை பாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பது தெரிந்ததே. கடந்த ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியான ’பிகில்’ திரைப்படத்தில் கூட ஒரு பாடலை பாடினார் என்பதும், அந்த பாடல் தமிழகம் முழுவதும் சூப்பர் ஹிட் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தளபதி விஜய் தற்போது நடித்து வரும் ’மாஸ்டர்’ படத்திலும் ஒரு பாடலை பாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அனிருத் இசையில் ஒரு அட்டகாசமான பாடலை விஜய் பாடல் இருப்பதாகவும் இந்த பாடலுக்கான கம்போஸிங் மற்றும் பாடல் வரிகள் தயாராகி விட்டதாகவும் இன்னும் ஓரிரு நாளில் இந்த பாடல் ஒலிப்பதிவு செய்யப்படும் என்றும் ’மாஸ்டர்’ படக்குழுவினர்கள் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் இந்த பாடல் சிங்கிள் பாடலாக விரைவில் வெளிவரும் என்ற தகவலும் வெளிவந்துள்ளதால் விஜய் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். ’மாஸ்டர்’ படத்தில் மொத்தமே மூன்று பாடல்கள் தான் என்றும் அதில் ஒரு பாடல் விஜய் பாடியது என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web

Trending Videos

Tamilnadu News