×

விஜய் எப்போதும் அப்படித்தான்... ராஜிவ் மேனன்!

ஒளிப்பதிவாளர் ராஜிவ் மேன் நடிகர் விஜய் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.  தமிழ் சினிமாவில் முன்னணி ஒளிப்பதிவாளராக இருப்பவர் ராஜிவ் மேனன். 

 

மணிரத்னமின் பாம்பே, குரு, கடல் உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக கலக்கிய இவர், டைரக்‌ஷனிலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இவர் இயக்கிய மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சர்வம் தாளமயம் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. 

விஜய் குறித்து பேசிய அவர், 'விஜய்யுடன் நான் விளம்பரப் படங்களில் பணிபுரிந்துள்ளேன். அவர் பேசவே மாட்டார், சும்மா தரையை பார்த்தபடி அமர்ந்திருப்பார். அவருக்கு டான்ஸ் ஆடி காட்டினால், அமைதியாக பார்த்துவிட்டு, ஓகே என வந்துவிடுவார். ஒரே டேக்கில் பர்ஃபக்ட்டாக முடித்துவிடுவார். அவர் நடனம் ஆடும் போது ரொம்பவே அழகாக இருப்பார்'' என விஜய் பற்றிய தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார். 

From around the web

Trending Videos

Tamilnadu News