விஜயகாந்த் நினைவு நாளுக்கு விஜய்க்கு அழைப்பு இல்லையா? நடந்தது என்ன?
விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தினம்:
விஜயகாந்த் மறைந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆன நிலையில் அவருடைய முதலாம் ஆண்டு நினைவு தினத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்களையும் நேரில் அழைக்க உள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து இருந்தார். அதன்படி சமீபத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு விஜயகாந்த் மகன் பிரபாகரன் மற்றும் சுதீஷ் ஆகியோர் நேரில் சென்று அழைப்பு விடுத்தனர்.
வருகிற 28ஆம் தேதி விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தேமுதிக கட்சியின் சார்பாக பெரிய அளவில் கொண்டாட இருப்பதாக சதீஷ் கூறியிருந்தார். இந்த நிகழ்வுக்கு எல்லா கட்சியினரையும் அழைப்பதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் இதில் விஜய்க்கு அழைப்பு விடுக்கவில்லை என்ற ஒரு தகவல் வெளியாகி வருகிறது. இதைப் பற்றி விஜயகாந்தின் தீவிர தொண்டராக இருக்கும் மீசை ராஜேந்திரன் கூறும் போது அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை.
விஜய்க்கு அழைப்பு இல்லையா?
சுதீஷ் விஜயின் மேலாளர் ஜெகதீஷிடம் பேசும் போது நான் அருகில் தான் இருந்தேன். அதனால் விஜய்க்கு அழைப்பு இல்லை என்று சொல்லிவிட முடியாது. மேலும் ஒரு சில கட்சித் தலைவர்கள் நேரில் எல்லாம் வர வேண்டாம். வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி அனுப்பினால் போதும். வந்துவிடுகிறோம் என்று சொன்னதாக மீசை ராஜேந்திரன் கூறினார். அதற்கு ஏற்ப விஜய்யும் நேரில் வர வேண்டாம். வாட்ஸப்பில் குறுஞ்செய்தி அனுப்பினால் போதும் என்று கூட சொல்லி இருக்கலாம் எனவும் மீசை ராஜேந்திரன் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.
மேலும் விஜயகாந்துக்கு டிரிப்யூட் கொடுக்கும் விதமாக இப்போது வெளியாகும் பல படங்களில் அவருடைய ரெஃபரன்ஸ்கள் இருக்கின்றன. குறிப்பாக லப்பர் பந்து திரைப்படம் தான் விஜயகாந்துக்கு கொடுக்கப்பட்ட உண்மையான ட்ரிபியுட். ஆனால் கோட் படத்தில் ஏஐ பயன்படுத்துகிறோம் என்று சொல்லி விஜயகாந்தின் மாஸ்கை மட்டும் பயன்படுத்துவதைப் போல அந்த படத்தில் இருந்தது. அது எங்களுக்கு முற்றிலுமாக திருப்தியாக இல்லை .
ஏஐ வேண்டவே வேண்டாம்:
அதன் பிறகு தான் அண்ணியார் அவர்கள் இனிமேல் வரும் படங்களில் விஜயகாந்த் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்றால் எங்களிடம் அனுமதி கேட்டு பயன்படுத்துங்கள் என கூறியிருந்தார். ஏனெனில் அவருக்கே அந்த படத்தில் திருப்தி இல்லை என்று தான் நினைக்கிறேன். மேலும் விஜயகாந்தின் மறைவிற்கு நடிகர் சங்கம் எந்த ஒரு ஒத்துழைப்பும் கொடுக்கவில்லை என்பது எங்களுடைய நீண்ட நாள் வருத்தமாகவே இருக்கிறது.
ஏனெனில் சிவாஜி இறப்பிற்கு விஜயகாந்த் எப்படிப்பட்ட ஒத்துழைப்பை கொடுத்தார் என்பது அனைவருக்குமே தெரியும். இன்று சினிமாவில் பல இயக்குனர்களை டெக்னீசியன்களை கடைநிலை ஊழியர்கள் என கிட்டத்தட்ட 420 பேரை விஜயகாந்த் உருவாக்கி இருக்கிறார். சினிமாவிற்காக பல நல்ல விஷயங்களை செய்திருக்கிறார். அப்படிப்பட்டவருக்கு நடிகர் சங்கம் காட்டிய நன்றி கடனா இது என மீசை ராஜேந்திரன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.