Jana Nayagan Box Office : 10 நாளாகியும் 300 கோடியை தொட முடியாத ஜன நாயகன்!

 
Jana Nayagan

10 நாட்களில் 'ஜன நாயகன்' செய்த வசூல் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டின் முதல்வரும், முன்னணி நடிகருமான 'தளபதி' விஜய் - இயக்குநர் ஹெச்.வினோத் காம்பினேஷனில் உருவாகியுள்ள புதிய படம் தான் 'ஜன நாயகன்'.

கடந்த ஜூலை 23-ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆன இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் கெளதம் மேனன், மமிதா பைஜு, பிரகாஷ்ராஜ், நரேன், நிழல்கள் ரவி, பிரியாமணி, பாபி தியோல், ஶ்ரீமன் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருக்கிறார், சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இதை 'KVN புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் சார்பில் வெங்கட்.கே.நாராயணா தயாரித்திருக்கிறார்.

விஜய்யின் சினிமா கரியரில் இது கடைசி படம் என்பதால், படம் நன்றாக இல்லையென்றாலும் 'தளபதி'க்காக அவரின் ரசிகர்கள் திரையரங்கு சென்று பார்த்து வருகிறார்கள். தற்போது, இப்படம் கடந்த 10 நாட்களில் உலக அளவில் ரூ.280.50 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

From Around the web