Jana Nayagan Box Office : 11 நாட்களில் ஜன நாயகன் செய்த வசூல் இவ்ளோ தானா?

 
Jana Nayagan

11 நாட்களில் 'ஜன நாயகன்' செய்த வசூல் தெரியவந்துள்ளது. தெலுங்கில் ஹிட்டடித்த பாலய்யாவின் 'பகவந்த் கேசரி' படத்தின் பட்டி டிங்கரிங் வெர்ஷன் தான் 'ஜன நாயகன்'.

இதில் ஹீரோவாக தமிழ்நாடு CM விஜய் நடிக்க, இதை 'தீரன் அதிகாரம் ஒன்று, சதுரங்க வேட்டை' போன்ற தரமான படங்களை கொடுத்த இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியுள்ளார்.

இதில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே, வில்லன் கதாபாத்திரங்களில் பாபி தியோல், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளார்கள். 'தளபதி'-யின் வளர்ப்பு மகள் ரோலில் மலையாள நடிகை மமிதா பைஜு வலம் வந்துள்ளார்.

கடந்த ஜூலை 23-ஆம் தேதி வெளியான இந்த படத்துக்கு கலவையான விமர்சனங்கள் தான் வந்தது. தற்போது, இப்படம் கடந்த 11 நாட்களில் உலக அளவில் ரூ.295.92 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

From Around the web