Jana Nayagan Box Office : ஒரு வழியா 300 கோடி கிளப்பில் இணைந்த ஜன நாயகன்!
12 நாட்களில் 'ஜன நாயகன்' செய்த வசூல் தெரியவந்துள்ளது. ஒரு படத்தை எடுத்து முடிப்பதற்குள் பெரும் போராட்டம். முடித்த படத்தை தியேட்டருக்கு கொண்டு வருவதற்கு அதைவிட பல கஷ்டங்களை சந்திக்க வேண்டியுள்ளது.
எல்லாம் தாண்டி தியேட்டரில் ரிலீஸ் செய்தால், படம் நன்றாக இருந்தால் தானே கல்லா கட்ட முடியும். இதில் உள்ள எல்லா பிரச்சனைகளையும் பார்த்து விட்டது 'ஜன நாயகன்'.
கடந்த ஜூலை மாதம் 23-ஆம் தேதி வெளி வந்த இந்த படம் தான் தமிழக முதல்வரும், நடிகருமான 'தளபதி' விஜய்-க்கு கடைசி படம். தொடர்ந்து நடிகர் அஜித்தை வைத்து 'நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு' ஆகிய படங்களை இயக்கிய வினோத் தான் இதை இயக்கியிருக்கிறார்.
படத்தின் ரிசல்ட் உலகத்துக்கே தெரியும், விஜய்-க்காக மட்டுமே ரசிகர்கள் தியேட்டருக்கு சென்று பார்க்கிறார்கள். ஒரு வழியாக கடந்த 12 நாட்களில் உலக அளவில் ரூ.301.35 கோடி வசூல் செய்து விட்டது.
