Jana Nayagan Box Office : 13-வது நாளில் வெறும் 2.39 கோடி வசூலித்த ஜன நாயகன்!
13 நாட்களில் 'ஜன நாயகன்' செய்த வசூல் தெரியவந்துள்ளது. 'பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும், குஷி, பகவதி, கில்லி, போக்கிரி, துப்பாக்கி, கத்தி' போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை தன்னுடைய திரையுலக வாழ்வில் 'தளபதி' விஜய் ரசிகர்களுக்காக கொடுத்திருக்கிறார்.
இப்போதைய தமிழ்நாட்டின் முதல்வர் ஆக இருக்கும் விஜய், கடைசியாக தனது 69-வது படத்துடன் சினிமா கரியருக்கு குட் பை சொல்லிவிட முடிவெடுத்து விட்டார். இந்த 'தளபதி 69' தான் 'ஜன நாயகன்'.
பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர், அதுவும் அரசியல் என்ட்ரி என இப்போதைய மாஸுக்கு ஒரு நல்ல கதையை டிக் அடிக்காமல் கடைசி படத்தை விஜய் மிஸ் பண்ணி விட்டார் என்பதே பல ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.
ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். தற்போது, இப்படம் கடந்த 13 நாட்களில் உலக அளவில் ரூ.303.74 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
