Jana Nayagan Box Office : 2 வாரம் ஆகியும் ஜன நாயகன் வசூல் இவ்ளோதானா?

 
Jana Nayagan

2 வாரத்தில் 'ஜன நாயகன்' செய்த வசூல் தெரியவந்துள்ளது. 'தி கோட்' படத்துக்கு பிறகு விஜய்யின் 69-வது படத்துக்காக ரசிகர்கள் வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

அவர்களுக்காக கடந்த ஜூலை மாதம் 23-ஆம் தேதி உலகமெங்கும் பல திரையரங்குகளில் 'ஜன நாயகன்' வெளியானது. இந்த படத்தை 'தீரன் அதிகாரம் ஒன்று, துணிவு' போன்ற படங்களை இயக்கிய வினோத் இயக்கியுள்ளார்.

இதில் தளபதியுடன் சேர்ந்து மமிதா பைஜு, பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், பாபி தியோல், கெளதம் மேனன், ஏ.எல்.அழகப்பன், ஶ்ரீமன், ஶ்ரீநாத், நரேன், பிரியாமணி, சுனில், மதன் கௌரி, மோனிஷா பிளெஸ்ஸி, பாலாஜி சக்திவேல் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் அதிகமாக வந்தது. தற்போது, இந்த படம் கடந்த 14 நாட்களில் உலக அளவில் ரூ.306.31 கோடி வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

From Around the web