Jana Nayagan Box Office : 325 கோடிய நெருங்க கூட ஜன நாயகனுக்கு வாய்ப்பு இல்ல!

 
Jana Nayagan

15 நாட்களில் 'ஜன நாயகன்' செய்த வசூல் தெரியவந்துள்ளது. 'தளபதி' விஜய்க்கு மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.

இருப்பினும் அரசியல் என்ட்ரியால் 'ஜன நாயகன்' தான் கடைசி படம் என்று அவர் எடுத்த முடிவால் ரசிகர்களுக்கு பெரிய வருத்தம் உண்டு. ஏனெனில், அந்த அளவுக்கு அவர் திரையில் வந்த படங்களை அவர்கள் கொண்டாடி மகிழ்ந்து இருக்கிறார்கள்.

தற்போதைய தமிழ்நாட்டின் CM-ஆக இருக்கும் விஜய்யின் 'ஜன நாயகன்' கடந்த ஜூலை மாதம் 23-ஆம் தேதி ஏகப்பட்ட சிக்கல்களை தாண்டி தான் ரிலீஸ் ஆனது.

ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில் பாசிட்டிவ் கேரக்டர்களில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன், கெளதம் வாசுதேவ் மேனன், நெகட்டிவ் கேரக்டர்களில் பிரகாஷ் ராஜ், பாபி தியோல், சுனில், பிரியாமணி ஆகியோர் நடித்துள்ளனர். தற்போது, இப்படம் கடந்த 15 நாட்களில் உலக அளவில் ரூ.308.67 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

From Around the web