Jana Nayagan Box Office : 2 நாட்களில் விஜய்யின் 'ஜன நாயகன்' செய்த வசூல் இத்தனை கோடியா?

 
Jana Nayagan 2 days collection

2 நாட்களில் 'ஜன நாயகன்' செய்த வசூல் தெரியவந்துள்ளது. கோலிவுட்டில் முன்னணி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருந்த 'தளபதி' விஜய் தான் இப்போது தமிழ்நாட்டின் CM.

அரசியலில் நுழையும்போதே 'ஜன நாயகன்' தான் கடைசி படம் என்று சொல்லி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து விட்டார் 'தளபதி'. இருப்பினும் தியேட்டருக்கு சென்று இவரின் கடைசி படத்தை பார்த்து கொண்டாட வேண்டும் என்று நினைத்த ஒட்டுமொத்த ரசிகர்களையும் கடந்த 6 மாதங்களாக வெயிட் பண்ண வைத்து விட்டது சென்சார் குழு.

ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படம் பல பிரச்சனைகளை தாண்டி ஒருவழியாக நேற்று முன் தினம் (ஜூலை 23-ஆம் தேதி) உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது. இதில் விஜய்யுடன் இணைந்து மமிதா பைஜு, பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம் மேனன் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும், கடைசியாக ஒரு முறை விஜய்யை திரையில் பார்த்து ரசிக்க வேண்டும் என்று தான் அனைத்து ரசிகர்களும் நினைக்கிறார்கள். தற்போது, இந்த படம் கடந்த 2 நாட்களில் உலக அளவில் ரூ.112.50 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

From Around the web