Jana Nayagan Box Office : 3 நாட்களில் விஜய்யின் 'ஜன நாயகன்' செய்த வசூல் இத்தனை கோடியா?
Jul 26, 2026, 06:51 IST
3 நாட்களில் 'ஜன நாயகன்' செய்த வசூல் தெரியவந்துள்ளது. 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' (தி கோட்) படத்திற்கு பிறகு 'தளபதி' விஜய் நடித்திருக்கும் படம் தான் 'ஜன நாயகன்'.
சமீபத்தில், தமிழக முதல்வராக பதிவியேற்ற விஜய்யின் கடைசி படம் இதுதானாம். இது கடந்த ஜூலை 23-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டது.
இதில் முக்கிய வேடங்களில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், நரேன், பிரியாமணி நடித்திருக்கிறார்கள். ஹெச்.வினோத் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு அனிருத் தான் இசையமைத்திருக்கிறார்.
விஜய்யின் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி லைக்ஸ் போட்டு வருகிறார்கள். தற்போது, இந்த படம் கடந்த 3 நாட்களில் உலக அளவில் ரூ.171.84 கோடி வசூல் செய்துள்ளதாம்.
