Jana Nayagan Box Office : 4 நாட்களில் விஜய்யின் ஜன நாயகன் செய்த வசூல் இத்தனை கோடியா?
4 நாட்களில் 'ஜன நாயகன்' செய்த வசூல் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அஜித்தை வைத்து 'நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு' என படங்கள் பண்ணியவர் இயக்குநர் ஹெச்.வினோத்.
இவரை அழைத்து தனது 69-வது படம், அதுவும் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்து ஹிட்டான 'பகவந்த் கேசரி' படத்தை ரீமேக் பண்ண சொன்னார் விஜய். வினோத்தும் ஓகே சொல்லி அவர் ஸ்டைலில் கொஞ்சமும், 'தளபதி'-யின் மாஸுக்கு தகுந்த மாதிரியும் மாற்றி பண்ண படம் தான் 'ஜன நாயகன்'.
இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால், விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராகி விட்டதால், இது தான் சினிமாவில் அவருக்கு கடைசி படம். இதை இயக்கிய பெருமை வினோத்துக்கே சேரும்.
கடந்த ஜூலை 23-ஆம் தேதி வெளியான இப்படத்தில் மமிதா பைஜு, பாபி தியோல், கெளதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே நடித்துள்ளனர். விமர்சன ரீதியாக இந்த படம் பாராட்டை குவிக்கவில்லை என்றாலும், பாக்ஸ் ஆபிஸில் கடந்த 4 நாட்களில் உலக அளவில் ரூ.217.48 கோடி வசூல் செய்திருக்கிறது.
