Jana Nayagan Box Office : 5 நாட்களில் விஜய்யின் ஜன நாயகன் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?
Jul 28, 2026, 07:33 IST
5 நாட்களில் 'ஜன நாயகன்' செய்த வசூல் தெரியவந்துள்ளது. தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நடித்துள்ள புதிய படம் தான் 'ஜன நாயகன்'.
இவரின் கடைசி படமான இது கடந்த ஜூலை 23-ஆம் தேதி திரைக்கு வந்தது. இதை 'சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, துணிவு' போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் ஹெச்.வினோத் தான் இயக்கியிருக்கிறார்.
இதில் விஜய்யுடன் சேர்ந்து மமிதா பைஜு, கெளதம் மேனன், பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரியாமணி, நரேன், பிரகாஷ் ராஜ், நாசர், சுனில், ரேவதி, ஜி.எம்.சுந்தர், நிழல்கள் ரவி, பாலாஜி சக்திவேல், ஏ.எல்.அழகப்பன், ஶ்ரீமன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படம் விஜய் ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்தாலும், நெகட்டிவ் விமர்சனங்களே அதிகம் வருகிறது. தற்போது, இப்படம் கடந்த 5 நாட்களில் உலக அளவில் ரூ.233.24 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
